CATEGORIES
Kategoriler
கமலா ஹாரிஸின் பெருமைகள் நிலைக்கும் !
இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கு ஒரு பெண் அதிபர் கிடைப்பதற்கான வாய்ப்பு மீண்டும் ஒரு முறை கைநழுவியிருக்கிறது.
டிரம்ப்: சரிவிலிருந்து சரித்திர சாதனை...
2020 அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வியடைந்ததற்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப்புக்கு சரிவு ஆரம்பமாகிவிட்டது என்று தான் பலரும் நினைத்தனர்.
டிரம்ப் வெற்றியால் உற்சாகம்: சென்செக்ஸ் 901 புள்ளிகள் உயர்வு
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தகதினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் தோல்வி
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி அணிகள் புதன்கிழமை தோல்வியைத் தழுவின. லிவர்பூல் அணி வெற்றி பெற்றது.
பாலினியை வெளியேற்றினார் கின்வென்
டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிர் டென்னிஸ் போட்டியில், சீனாவின் ஜெங் கின் வென் அரையிறுதிக்கு புதன்கிழமை தகுதிபெற்றார். இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி அந்த வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
விதித் குஜராத்தி 2-ஆவது தோல்வி, அர்ஜுன் ஆட்டம் டிரா
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்
நீட் மேல்முறையீட்டு மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான 'நீட்' மறுதேர்வுக்கு உத்தரவிட மறுத்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
காளி பூஜை பந்தலில் வன்முறை: விடியோ வெளியிட்ட செய்தியாளர்கள் இருவர் கைது
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், காளி பூஜை பந்தலில் நடைபெற்ற வன்முறை விடியோவை வெளியிட்ட உள்ளூர் செய்தியாளர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
பொதுத் துறை வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்
நடப்பு நிதியாண்டில் வேளாண்மை சார்ந்த துறைகளில் கடன் இலக்கை எட்ட வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளை நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சாலை விரிவாக்கப் பணிக்காக நோட்டீஸ் அளிக்காமல் வீட்டை இடித்ததற்காக உத்தர பிரதேச மாநில அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி ஏன்?
மார்க்சிஸ்ட் விளக்கம்
ராகுல் குடியுரிமை விவகாரத்தில் சிபிஐ விசாரணை: தில்லி உயர்நீதிமன்றத்தில் தகவல்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையை பெற்றிருக்கும் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் காலம் வரும்
நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் காலம் வரும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் ஆண்டனி ஆல்பனேசியை புதன்கிழமை சந்தித்தார்.
ஐ.நா.வில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தான்
ஐ.நா.வில் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தான், பொய்களை பரப்புவதுடன், தங்கள் பிளவு அரசியல் கொள்கையை சா்வதேச அமைப்பில் பயன்படுத்துகிறது என இந்தியா கண்டனம் தெரிவித்தது.
மகாராஷ்டிரத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3,000; இலவச பேருந்து பயணம்
மகா விகாஸ் அகாடி கூட்டணி தேர்தல் வாக்குறுதி
கடிகார சின்னம்: நேரத்தை வீணடிக்க வேண்டாம்!
கடிகாரம் சின்னத்துக்காக நேரத்தையும், உழைப்பையும் நீதிமன்றத்தில் வீணடித்துக் கொண்டிருக்காமல், வாக்காளா்கள் மீது கவனம் செலுத்துங்கள்’ என்று மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா், மூத்த அரசியல் தலைவா் சரத் பவாா் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
தொலைபேசி அழைப்புகளில் மோசடி: அரசுப் பணியாளர்களுக்கு எச்சரிக்கை
தொலைபேசி அழைப்பு வரும்போது திரையில் தோன்றும் ‘அழைப்பாளர் ஐடி’ தகவலை முழுமையாக நம்ப வேண்டாம் என்று சைபர் பாதுகாப்பு ஆலோசனையில் அரசுப் பணியாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அரசமைப்பின் மாண்புகளை அழிக்க பாஜக, பிரதமர் மோடி முயற்சி
பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
ஹிமாசல் காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு
காங்கிரஸ் ஆளும் ஹிமாசல பிரதேசத்தில் அக்கட்சியின் மாநிலக் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட்டது.
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரதான வாயில் தடுப்புகள் அகற்றம்
பொதுதீட்சிதர்கள் மற்றும் பெருமாள் கோயில் அறங்காவலர்கள் இடையே சமரசம் ஏற்பட்டதால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் உட்கோயிலாக உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடிமரம் முன் பிரதான வாயிலில் இருந்த தடுப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
2,553 மருத்துவ காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர்
2,553 மருத்துவ காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்தார்.
சொத்து வரி நிலுவை: கட்டடத்துக்கு ‘சீல்’ வைக்க மாநகராட்சிக்கு அதிகாரமில்லை
தமிழ்நாடு நகர்ப்புறச் சட்டத்தின் கீழ் சொத்து வரி செலுத்தாமல் இருப்பவரிடமிருந்து குற்றவியல் அல்லது உரிமையியல் நீதிமன்றம் மூலமே வரியை வசூல் செய்ய முடியும். இதை மீறி, ஒருவரது கட்டடத்தைப் பூட்டி 'சீல்' வைக்க மாநகராட்சிக்கு அதிகாரமில்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அந்த யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாற்று நில முறைகேடு வழக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்த அதிகாரிகள் விசாரணை
மைசூரு, நவ. 6: மாற்று நில முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்த போலீஸார் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.
காவிரி நீரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்: 4 மாநிலங்களுக்கும் ஆணையம் அறிவுறுத்தல்
காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் புதன்கிழமை அறிவுறுத்தியது.
இலகுரக உரிமம் பெற்றவர்கள் சரக்கு வாகனங்களை இயக்கலாம்
7,500 கிலோ எடை வரையிலான சரக்கு வாகனங்களை இயக்க இலகுரக வாகன (எல்எம்வி) ஓட்டுநர் உரிமம் போதுமானது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு புதன்கிழமை தீர்ப்பளித்தது.
அரசின் திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு
கொள்கை உருவாக்கம் உள்பட எட்டு முக்கிய செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் இந்திய மகளிரின் பணி நேரம்
இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது. சில இடங்களில் ஆண்களைவிட கூடுதல் நேரம் பணிபுரியும் பெண்கள் உள்ளனர் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
தற்சார்பு கிராமங்கள் எப்போது சாத்தியம்?
இந்தியாவில் வாழும் 142 கோடி பேரில், சுமார் 82 கோடி பேர் குடிநீர், உணவுக்கு பெரும் போராட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த 82 கோடி பேருக்குத்தான் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் இலவச அரிசித் திட்டத்தை நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்துள்ளது மத்திய அரசு. இவர்களின் வாழ்க்கை மேம்படாமல் இந்தியா ஒரு நாளும் முன்னேற்றமடையாது.