CATEGORIES
Kategorier
என்ன தவம் செய்தோமோ?
ராஜாதி ராஜா ''நான் ரசித்துக் கிறங்கிய அந்த ஒரு இளையராஜா பாடல்...."
சமையல் டிப்ஸ்
ரவா தோசை செய்யும் பொழுது இரண்டு ஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறுமொறுப்பாக இருக்கும்.
அவதார்
பல விதங்களில் இந்தியாவோடு தொடர்புடைய ஹாலிவுட் திரைப்படம் அவதார். 2009இல் வெளியாகி இந்தியா உட்பட பல நாடுகளில் வசூலைக் குவித்த திரைப்படம். 'டைட்டானிக்', 'டெர்மி னேட்டர்', 'ட்ரு லைஸ்' போன்ற படங்களை ஏற்கெனவே இயக்கிப் புகழ் பெற்றிருந்த இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனை, புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற படம். திரைப்படக் களன் 2148லிருந்து 2154 வரை நடப்பதாக விரிகிறது.
அம்பிகை அலங்காரமும் வழிபாடும்!
முப்பெரும் தேவியரான மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகியோரை ஒருசேர வழிபடும் திருநாளே நவராத்திரி பண்டிகையாகும். இம்மூன்று தேவியரே நவராத்திரியில் பிரதான வழிபாட்டு தெய்வங்கள் ஆயினும், இந்தப் பண்டிகையின் (விஜயதசமியையும் சேர்த்து) பத்து நாட்களும் அம்பிகையை பத்து வித அலங்காரத்தில் போற்றி வணங்குவது மரபு.
"கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்!"
திவ்யா சத்யராஜ் திட்டவட்டம்
41க்கு 41!
முனைவர் ப்ரியா கிருஷ்ணன் ஒரு குடும்பத் தலைவி, தொல்லியல் ஆய்வாளர், தமிழ்ப் பேராசிரியை, நமது மொழியின், கலாசாரத்தின் தொன்மையை சாமானியர்களுக்கும் எடுத்துச் செல்லும் சமூகச் செயற்பாட்டாளர்.
"எப்பொழுதும் நாங்கள் துணை இருப்போம்!”
சாதாரண மக்களின் வாழ்க்கைக்கும் ராணுவ வீரர்களின் வாழ்க்கைக்கும் ஏக வித்தியாசம்.
வங்கியிலில் கடன் வாங்கியிருக்கிறீர்களா? உஷார்!
ஓருவரது தங்கை சாலை விபத்தில் உயிரிழந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அந்த விபத்து தொடர் பான வழக்குகள் மற்றும் காப்பீடுகள் போன்ற விஷயங்களை அவரது அண்ணன்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
க்ரேப் கேக்...கிரேட் சாதனை!
மிக அதிக எண்ணிக்கையிலான அடுக்குகளைக் கொண்ட ஒரு க்ரேப் கேக் தயாரித்து சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிக்க முடியுமா? ஏன் முடியாது? இடம் பிடித்துக் காட்டி யுள்ளார் ராஜபாளையம் நகரைச் சேர்ந்த அகிலா விமல். பொறியியல் பட்டதாரி. அவரது கணவர் விமல் ஆறுமுகம். மூன்று பெண் பிள்ளைகள். அகிலா விமல் இல்லத்தரசி. அவருக்குள் எப்படி வந்தது இதன் மீதான ஆர்வம்? பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தில் பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவருக்கு , சமையல் கலை மீதும் அந்த ஆர்வம் தொற்றிக் கொண்டது.
மழை வருது...மழை வருது...
மழைக்காலத்தில் ரப்பர் செருப்புகளை உபயோகிக்கவும். லெதர் ஷூ, லெதர் செருப்பு தண்ணீரில் ஊறினால் பாழாகிவிடும்.
கூந்தலைப் பராமரிப்பது எப்படி?
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்ற மன்னன் செண்பக பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்க்க இறையனாரே நேரில் வந்து புலவர் தருமி வாயிலாய் கொடுத்தனுப்பியதாகச் சொல்லப்படும் குறுந்தொகைப் பாடல் இது...
காக்கிச் சீருடைக்குள்ளே ஒரு கலைஞர்!
பி.சாமுண்டீஸ்வரி. ஐ.பி.எஸ். காஞ்சிபுரம் காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல். தனது சிறப்பான பணிக்கு அங்கீகாரமாக ஜனாதிபதியின் பதக்கம் பெற்றவர். ஆனால் இவர் ஒரு பன்முகப் பெண்மணி. இவர் ஒரு குரலிசைக் கலைஞர். வீணைக் கச்சேரிகள் செய்வார். இதைத் தவிர சாமுண்டீஸ்வரி ஒரு எழுத்தாளரும் கூட. ஆன்மிகத்தில் குறிப்பாக சித்தர்கள் மீது இவருக்குப் பேரார்வம் உண்டு. மங்கையர் மலருக்கு இவர் அளித்த பேட்டியின் முக்கியப் பகுதிகள்:
கலிஃபோர்னியாவின் காட்டுத்தீ!
அமெரிக்க தீயணைப்புத் துறை வெளியிட்டிருக்கும் தகவல்கள் கவலையளிக்கின்றன. ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கிய காட்டுத்தீ, கலிஃபோர்னியாமுழுக்கக் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. போதைய நிலவரப்படி 7860 காட்டுத்தீ நிகழ்வுகளில் இதுவரை 33 லட்சம் ஏக்கர்கள் எரிந்து சாம்பலாகியிருக்கின்றன. பல தீயணைப்பு வீரர்கள் உட்பட 26 பேர் இறந்திருக்கிறார்கள். பொருட்சேதம் எவ்வளவு ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றிய கணக்கெடுப்பு இன்னும் நடந்து முடியவில்லை.
உடைக்கப்பட்டுவிட்ட நிறைகுடங்கள்
"எதுவும் முன்ன மாதிரி இல்லை சார்” இது பல இடங்களில் நாம் கேட்டுக் கேட்டு பழக்கப்பட்டுவிட்ட வாசகம். ஆனால், ஏன் எதுவும் முன்ன மாதிரி இல்லை என்று நாம் என்றேனும் நினைத்துப் பார்த்ததுண்டா? நாம் அனுபவிக்கும் பொருட்கள் தொடங்கி நாம் கொண்டாடும் திறமையான ஆளுமைகள் வரை எல்லாமே இங்கு விளம்பரங்களுக்கும் சந்தைப்படுத்துதலுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உற்றுநோக்கினால் அதன் விபரீதத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
மதர் இந்தியா
கேதரின் மேயோ என்பவர் 1927 இல் 'மதர் இந்தியா' என்ற பெயரில் ஒரு நூலை எழுதி இருந்தார். அதில் இந்திய சமூகம், பண்பாடு, மதம் எல்லாவற்றையுமே சகட்டுமேனிக்குத் தாக்கி இருந்தார். மகாத்மா காந்திகூட இந்த நூலுக் கெதிராகத் தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார்).
பார்லர் போகாமலே பளிச்சிடலாம்!
கொரோனா காலத்தில் வீட்டை விட்டே வெளியே போக யோசிக்கிறோம். ஆன்லைன் வகுப்புகள், வொர்க் ஃப்ரம் ஹோம் என்று வீடே கதியெனக் கிடக்கும் பெண்கள், தங்களை அழகுபடுத்திக் கொள்ள பார்லர் பக்கம் போயே பல நாட்களாகி யிருக்கும். இந்த நிலையில், வீட்டிலிருந்தபடியே தங்களை நேர்த்தியாக அழகுபடுத்திக் கொள்ள விரும்பும் பெண்களுக்காகவே, கொரோனா கால அழகுக் குறிப்புகளைத் தருகிறார் அழகுக்கலை நிபுணர் ராதிகா.
ஆப்பம் மென்மையா வரனுமா?
ஆப்பத்துக்கு அரைக்கும் போது, தேங்காய்த் தண்ணீர் சேர்க்கவும். மறுநாள் மாவு பொங்கி இருக்கும். அதில் அரை கப் சூடான பால் சேர்த்து பிறகு ஆப்பம் சுடவும். மென்மையாக இருக்கும்.
அன்னக் குறை இல்லாமலிருக்க...
நம் ஆன்றோர்கள் றை வழிபாட்டிற்காக, பல ஆலயங்களை அமைத்திருக்கிறார்கள். எதற்காக? ன்பமும் துன்பமும் இணைந்ததுதான் வாழ்க்கை என்பதை எல்லோரும் அறிந்ததே. துயர்களைத் துடைத்து, தூய்மையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள, துணையாய் இருப்பது, தெய்வ நம்பிக்கை மட்டும்தான்.
"சினிமாவை விட்டு விலக நினைத்தேன்!"
நடிகை அனுஷ்கா ஓபன் டாக்!
ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட்
'ஜுராசிக் பார்க்', 'ஈ.டி.' போன்ற படங்களை இயக்கி ஏற்கெனவே பிரபலமடைந்த ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய திரைப்படம், 'ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட்.
வெப் சீரிஸ்களில் பெண்கள் எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள்?
ஊடகங்களுக்கும் பெண்களுக்கும் என்றும் ஏழாம் பொருத்தம்தான். ஊடகங்களில் பெண்களின் சித்தரிப்பு என்பது பெரும்பாலும் அவர்களை சந்தைப்படுத்தும் நோக்கிலோ அல்லது பெண் பார்வையாளர்களின் சந்தையைக் குறிவைத்தோ கட்டமைக்கப்படுகிறது. ஒன்று, திரையில் தோன்றும் பெண் கதாபாத்திரங்கள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகும்.
பட்டுப் புடைவையை எப்படிப் பராமரிக்கலாம்?
புடைவையில் பல வகைகள் இருப்பினும், திருமணம், அதைச் சார்ந்த சுபகாரியங்கள், பண்டிகைகள் மற்றும் விசேஷ நாட்களில் பெண்கள் விரும்பி அணிவது பட்டுப் புடைவையே.
தமிழக அடுக்குமாடி கலாசாரத்தின் தந்தை!
சென்னை இன்று அடுக்குமாடிக் கட்டடங்களின் நகரமாக மாறியிருக்கிறது. சென்னை மட்டும் அல்லாமல், தமிழகத்தின் பல நகரங்களிலும் இந்த அடுக்குமாடிக் கட்டடக் கலாசாரம் பரவி வேரூன்றியிருக்கிறது.
சுகப்பிரசவ டாக்டரம்மா!
சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வரிடமிருந்து சிறந்த மருத்துவர் விருது பெற்ற மகப்பேறு மருத்துவர் சியாமளா நாகராஜனைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவிக்க, சேலத்தில் அவர் இருக்கும் இடமான ஜாகீர் அம்மாபாளையம் சென்றோம். அங்கு வசிக்கும் பொதுமக்கள், "யாரு... அந்த சுகப்பிரசவ டாக் டரம்மாவா?" என்ற அடைமொழியுடன் அவர் இருக்கும் இடத்தைக் காண்பித்தார்கள்.
கறிவேப்பிலையில் இருக்கு இவ்வளவு நன்மைகள்!
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளன. தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?
அமைதி-ஆனந்தம்-ஆரோக்கியம் அதுல்யா
''உங்க பெற்றோருக்கு முதியோர் இல்லம் எல்லாம் வேண்டாம்... அதுல்யாதான் பெஸ்ட் சாய்ஸ்'' என்ற உறுதியுடன் துவங்குகிறார் அதுல்யா அசிஸ்டெட் லிவிங்-ன் நிறுவனரும் இயக்குனருமான சீனிவாசன். தனிமை, தவிப்பு, தேடல், தளர்வு இப்படி பல இன்னல்களைச் சந்தித்துக்கொண்டும் சகித்துக்கொண்டும் வாழும் எண்ணற்ற முதியோர்களுக்கு அதுல்யா அசிஸ்டெட் லிவிங், ஒரு நிம்மதி தரும் வரம்.
பிரதமருடன் ஒரு நிமிடப் பேச்சு...ஆனந்தத்தில் மிதந்த மாணவி!
நாடெங்கும் சி.பி.எஸ்.ஈ. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி, அத் தேர்வு எழுதிய மாணவ மணிகள் மகிழ்ந் திருந்த நேரம்..க்கு 490 மதிப்பெண்கள் எடுத்து நாமக்கல் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த கனிகாவின் வீட்டிலும் சந்தோஷம் களைகட்டியது.
பப்பாளியின் A-Z தீர்வுகள்!
பழத்தைத் தாண்டி பப்பாளியின் இலை, காய், விதை, பால் என அனைத்துமே மருத்துவக் குணம் வாய்ந்தவைகளாகவே உள்ளன. பல நோய்களுக்குத் தீர்வு காணும் மருந்துகளாகவும் செயல்படும் பப்பாளியைப் பற்றிப் பார்க்கலாமே.
பிரண்டையின் மருத்துவப் பயன்கள்
பிரண்டை உடலைத் தேற்றும்; பசியைத் தூண்டும். பிரண்டைத் துவையலை சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர, ரத்த மூலம் குணமாகும். வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.
சொத்தில் பெண்களுக்கு சம உரிமை!
பேச்சுரிமை, படிப்புரிமை, ஓட்டுரிமை முதல் பல்வேறு உரிமைகளும் நம் பெண்களுக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னரே கிடைத்திருக்கிறது!