CATEGORIES
Kategorier
காதல்-கல்யாணம் சமையல்-சாப்பாடு வேடிக்கை-விளையாட்டு
இந்த இதழின் கரு காதல், கல்யாணம், சமையல், சாப்பாடு. இதில் முதல் இரண்டை இணைத்து ஒரு அட்டைப்படக் கட்டுரை எழுதத்தான் ஆனந்தமாய் அந்த வீட்டிற்குள் நுழைந்தோம். நாலும் பற்றி எழுதும் வாய்ப்பு கிடைத்தது பேரானந்தம். க்யூட்டான இளம் ஜோடி அனிருத் ஆத்ரேயா, அவர் மனைவி இந்து மற்றும் அவர்களின் செல்ல நாய் ''ஷிவு'' மூவரும் வரவேற்றனர்.
அமெரிக்காவை ஆளப்போகும் பெண்கள்
அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த வன்முறைகளுக்குப் பின்னர், பலத்த பாதுகாப்புகளுக்கிடையே பதவியேற்றிருக்கிறார் ஜோ பைடன். அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கும் ஆட்சி மாற்றம் சில நல்ல விஷயங்களுக்காகப் புதிய சரித்திரம் படைத்திருக்கிறது. அவற்றுள், அமெரிக்க அரசில் அதிகளவில் இந்திய வம்சாவளியினரும் தமிழர்களும் கோலோச்ச உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பைடனால் அறிவிக்கப்பட்ட அமைச்சரவையில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் என்பது பெருமிதம்! அந்தப் பலருள் சிலரின் அறிமுகம்.....
"காதல் வாழ வேண்டும்"
தனது நூற்றாண்டு பயணத்தில் தமிழ் சினிமா எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்துவிட்டது. ஆனால், குறிப்பிடத்தக்க இயக்குனர்களின் படைப்புகளே காதலைக் குதூகலமுடன் எல்லா காலத்து இளசுகளும் ரசிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன.
மோட்ச சன்யாஸ யோகம்
அர்ஜுனன் தனக்கேற்பட்ட சந்தேகத்தை வினவினான்... “தோள்வலிமை மிக்க கிருஷ்ணா! கேசி என்ற அசுரனைக் கொன்றவனே! சன்னியாசம், தியாகம் இரண்டின் உட்பொருளையும் விரிவாக அறிய விரும்புகிறேன். அதைப் பற்றி எடுத்துக் கூறு” என்றான்.
நந்தவனத்துப் பூக்கள் நாம்!
ஜனவரி 26, நமது தேசத்தின் குடியரசு தினம் என்பது நமக்கெல்லாம் தெரியும். ஆனால், அதற்குப் பின்னால் இருந்த நீண்ட கனவும், அது நிறை வேறிய கதையும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்; அல்லது நினைவு இருக்கும்.
ஜொலிக்கும் ஆம்பர் நகைகள்
வட ஐரோப்பாவில், பால்டிக் கடலும் ஃபின்லாந்து வளைகுடாவும் சூழ இருக்கும் நாடு எஸ்டோனியா (Estonia).
விட்டாரப் பேச்சு வெள்ளந்தி மனர்
"ஹலோ... தீபா சங்கர் -ங்களா? மங்கையர் மலரிலிருந்து பேசுறோம். உங்க பேட்டி கிடைச்சது ரொம்ப சந்தோஷம். நாளைக்கு எந்த இடத்துல உங்கள சந்திக்கலாம் மேடம்?” '
காவடி சுமந்து அசைந்து ஆடி வருகிறோம் - வேலவா வடிவேலவா!
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வருகின்ற அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்கள் ஆன்மிக அதிர்வலைகள் அதிகம் கொண்டவை. எனவே, அந்தத் தினங்களில் நடத்தப்படுகிற வழிபாடுகள் பலன் தர வல்லவை.
“எனக்கு நோய் கொடுத்த இறைவனுக்கு நன்றி”
அந்த இளம்பெண் சுற்றிச் சுழன்று ஆடிக் கொண்டே இருக்கிறார். அரங்கில் அமர்ந்திருப் பவர்களின் பார்வை முழுவதும் அவர் மேலே. அவரின் நாட்டியத்தை ரசித்தபடி. அங்கே ஒரு ஜோடிக் கண்கள் மட்டும் ஒருவிதப் பதற்றத் துடன் அவரையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தன. ஆட்டம் முடிந்தது. அனைவரின் கரகோசத்துடன் அந்தப் பெண்ணிற்குப் பாராட்டுகள் குவிந்தன.
அநுலோமாக்கள்
வாசகர் ஜமாய்க்கிறாங்க
மனதில் உறுதி சிந்தனையில் தெளிவு
இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்
அவன் அவள் குழந்தைகள்!
கௌதம் பள்ளியிலிருந்து தங்கள் ஃப்ளாட் டிற்குள் செல்லும் பொருட்டு வீட்டுச் சாவியைப் பையிலிருந்து எடுக்கையில் அவன் அம்மாஷாலினி எதிர்வீட்டிலிருந்து வெளியே வந்தாள்.
அட்லான்டிக் ஆழ்கடல் அற்புதங்கள்
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தன்னைச் சுற்றிய இயற்கையை ஆர்வத்துடன் கவனித்து வருகிறான் மனிதன். நமக்கு எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் ஆவல் இருக்கிறது. பிரபஞ்சத் தின் விளிம்புக்கும் ஆழ்கடலுக்கும் நம்மைப் பயணிக்க வைப்பது இந்தப் பேராவல்தான்.
நமக்கு நாமே!
உடல், உயிர், மனம் இந்த மூன்று சமாச்சாரங்கள் நம் வாழ்க்கையின் அடிப்படை. இந்த மூன்றையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் எத்தகைய துன்ப சூழலும் நம்மை நெருங்காது. இந்த மூன்றையும் சரிசெய்ய ஏகப்பட்ட அகம் மற்றும் புறம் சீரமைக்கும் குருமார்களும் பயிற்சி மன்றங்களும் பயிற்சி வகுப்புகளும் வந்துவிட்டன. ஆனால், 'இங்கெல்லாம் போக எனக்கு விருப்பமில்லை. வீட்டில் இருந்தே என்னை நான் சரிசெய்துகொள்வேன்' என்பவர்களுக்கு இதோ....நமக்கு நாமே அளித்துக்கொள்ளக்கூடிய பாசிடிவ் பயிற்சிகள்:
கலகல வித்யுலேகா
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு என்றுமே பஞ்சம் கிடையாது.
நான்கு கதைகள்
புரையோடிப் போய்விட்ட சமுதாயச் சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் நான்கு பெண்களின் உணர்வுகளை நம் இதயம் வலிக்க வலிக்கச் சொல்லியிருக்கிறார்கள். சமுதாயம் மாறித்தான் ஆகவேண்டும். இளைய சமுதாயம்தான் மாற்ற வேண்டும். தங்களின் அறிவு கண்வழியே கல்வி எனும் விளக்கின் துணைகொண்டு மாற்றித்தான் ஆகவேண்டும் என்பதே இது நமக்குத் தரும் பாடம்.
ஆண்மை
'வசந்த் காலிங்' மொபைல் அழைத்துக் கொண்டே இருந்தது.
'சிரி'குரு சிரிப்பானந்தா
நீண்ட தாடி. ஓஷோ போன்று தலையில் வழுக்கை. அதை மறைக்கும் தொப்பி. எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்கும் பாவனை... 'சிரி'குரு சிரிப்பானந்தா சம்பத் ஒரு டிஜிட்டல் யுக குரு. உலகின் பல பகுதிகளுக்கு ஓடி ஓடி அங்குள்ளவர்களை சிரிக்கவைத்துக்கொண்டிருக்கிறார். அவரது பேட்டிக்காக, தொலைபேசியில் தொடர்பு கொள்ள, சிரிக்கச் சிரிக்கப் பேசி என்னைச் சிந்திக்க வைத்த பதிவு இது.
எண்ணத்தின் ஆற்றல்
மனம் எங்கு இருக்கிறது என்று கேட்டால், நாம் உடனே இதயத்திற்கு அருகே கை வைத்துக் காட்டுவோம்.
70+ புத்துணர்ச்சி எப்படி?
'60+ல் ஓய்வு' என்பது பெயருக்குத்தான். ஓய்வுக்குப் பிறகுதான் சமூகக் கடமைகள் அதிகரிக்கும் என்பதே உண்மை. இந்தப் பிரபஞ்சத்திடமும் சமூகத்திடமும் இருந்து பெற்றவற்றைத் திரும்பவும் சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும் அல்லவா? 70 + வயதில், செயலில் இளமை, புதுமை, துறுதுறுப்பு பொங்க சேவையாற்றிக் கொண்டிருக்கும் இந்த மூவர் என்ன சொல்கிறார்கள்?
"வணக்கம் கிருஷ்ணகிரியில் இருந்து ஹேமா.... "
அரசு விழா அது... மத்திய அமைச்சருடன் நகரின் அனைத்து அரசு சார்ந்த முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்த அந்த விழாவில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அந்த விழாவைத் தொகுத்து வழங்கிய கணீர்க்குரல். அழகு தமிழைத் தெள்ளத்தெளிவா வாகத் தனது இனிமையான குரலால் மேலும் அழகாக்கிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் ஹேமா ராகேஷ். திறமையும் ஆர்வமும் முயற்சியும் இருந்தால் ஒரு பெண் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஹேமா ஒரு சாட்சி.
"வருஷம் போனால் என்ன? வயதானால் என்ன? நம் வாழ்க்கை நம் கையில்”
டாக்டர் எஸ்.சிவகுமார்
"மாஸ்க்கும் க்வாரன்டைனும் எனக்கு சகஜமப்பா!"-சாரதா பேசுகிறாள்....
"அன்பு சகோதரிகளே, நான்தான் சாரதா பேசுகிறேன். 10 ஆண்டுகளுக்கு முன் உங்களோடு பேசினேனே என்னை ஞாபகம் இருக்கிறதா? ஆம். அதே சாரதாதான். என் ஆத்ம தோழி உஷா மூலம் உங்களை எல்லாம் அப்போது சந்தித்தேன். என்னைப் பற்றித் தெரியாதவர்களுக்கு இதோ உஷாவே முதலில் பேசுவாள். என்னால் அதிகம் பேச முடியாது என்பதே காரணம். சற்று சுதாரித்துக் கொண்டு நான் பிறகு பேசுகிறேன்."
முக்குணங்களின் தன்மை!
மனிதர்களின் மூன்று குணங்களாகிய ராஜஸ, தாமஸ, சத்வ குணங்கள் பற்றியும் அவற்றைக் கொண்டிருக்கும் மனிதர்களின் இயல்புகள் பற்றியும் ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார். மேலும் இந்த மூன்று குணங்களையும் கடந்து சென்றபின் ஏற்படக்கூடிய அறுதிப் பலன் பற்றியும் அர்ஜுனனுக்கு விரிவாக விளக்குகிறார்.
தோற்ற மயக்கங்கள்
இது என்ன திடீர் கலாட்டா? புறநானூறு பாடல் எல்லாம் எதற்கு என்ற ஐயம் எழலாம்.
தலைகீழான அரசமரம்!
இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்துள்ள பரமாத்மாவான புருஷோத்தமனின் இயல்புகள் பற்றி 15-ம் அத்தியாயமான ‘புருஷோத்தம யோகத்தில்' விவரிக்கிறார்.
ஆண்டவன் தீர்ப்பு
மஞ்சு கொள்ளை அழகு. அவள் மனமும்தான். இருந்தாலும் என்ன? சிறுவயதில் வைசூரி தாக்கியதில் முகம் சற்றே பாதிக்கப்பட்டுவிட்டது. குழந்தையை வாழை இலையில் போட்டு, பொத்து பொத்து பாதுகாத்தனர், பெற்றோர் அன்று!
அக்னிப் பிரவேசம்
உபன்யாசகர்; சொற்பொழிவாளர்; ஆன்மிக எழுத்தாளர்; ஆழமான, அறிவுபூர்வமான, அனை வருக்கும் எளிதில் விளங்கும்படியான பிரசங்கங்களை மிக இயல்பாக சர்வசாதாரணமாக வழங்கி பல ஆயிரம் மனங்களைக் கவர்ந்தவர், துஷ்யந்த் ஸ்ரீதர். அவரிடம் ஒரு 'கேள்வி' அஸ்திரத்தை வீசினோம். 'ராமர் சீதையை அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னது சரியா?' 'இதற்கு ஒரு விளக்கம் உண்டு என்று அவர் அளித்த ‘பதில்' அஸ்திரம் இதோ:
பூர்ணிமா 2.0
இயக்கமில்லாம ரொம்ப நாள் கெடந்தா எந்திரம் கூட உடனடியா இயங்கத் தயங்கும். எட்டு மாசம் வெளி உலகத்தை எட்டிப் பாக்காம இருந்துட்டு, தீபாவளி பட்டி மன்றத்துக்காகப் பையைத் தூக்கிட்டுக் கெளம்புனேன். மூலையில தூசி மண்டி முடங்கி இருந்த ட்ராலி பேக்' உருள மறுத்துச்சு.
தும்பையும் தூதுவளையும்
வாசகர் ஜமாய்க்கிறாங்க