CATEGORIES
Kategorier
தீபமாக இரு
'அண்ணா இந்த அஸ்திரம் எனக்குச் சொல்லித் தர முடியுமா?” தயங்கிய படி கேட்ட யுயுத்சுவை ஏளனமாகப் பார்த்தான் அர்ஜுனன்.
கோடைகால டிப்ஸ்
கோடையில் காலையில் எழுந்ததும் பல் தேய்த்து விட்டு இரண்டு தம்ளர் தண்ணீர் குடிக்கலாம். இதனால் உடல் உஷ்ணம் குறையும். உடனே வயிற்றில் இருக்கும் கழிவுகள் வெளியேறும். உடம்பும் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். மற்ற பருவத்தில் நாள் ஒன்றுக்கு எட்டு தம்ளர் தண்ணீர் குடித்தால், கோடையில் 12 தம்ளர் தண்ணீர் குடிக்கலாம்.
கொரோனா முதியவர்களைப் பாதுகாப்பது எப்படி?
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 சதவிகிதத்தினர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களே. இதற்கு முக்கிய காரணம் இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதுதான். வயதான காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதய நோய்கள், பக்கவாதம், உடற் பருமன், சிறுநீரக நோய் மற்றும் புற்று நோய்களினாலும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது. இந்நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளினாலும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது.
'அரசியல்வாதி மாப்பிள்ளையா?'
மனம் திறக்கிறார் மந்திரி மனைவி!
நலமருள வந்த நாரணன் அவதாரம்!
எப்போதெல்லாம் தர்மம் நசிந்து அதர்மம் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் பகவான் மஹாவிஷ்ணு அவதரித்து அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டுகிறார். அந்த வகையில் பகவான் எடுத்த ஒன்பது அவதாரங்களில் இரண்டாவது அவதாரம்தான் கூர்மாவதாரம்.
ஜூம் வதந்திகளும், வாய்ப்புகளும்!
கொரோனா பாதிப்பால் எல்லோரும் அவரவர் வீட்டில், அல்லது அதிகபட்சம் அவரவர் தெருவுக்குள் முடங்கிக் கிடக்கின்ற சூழல். அதற்காகச் சமூகத் தொடர்புகளை விட்டுவிட இயலுமா? நண்பர்கள், உறவினர்களில் தொடங்கி அலுவலக, தொழில் உறவுகள்வரை எல்லாரோடும் அடிக்கடி பேசவேண்டியிருக்கிறது. என்னதான்ஃபோனில் பேசினாலும், நேரில் பார்க்கிற உணர்வு வராதே!
நாமன்றி வேறில்லை! தங்கப்பதக்கம் முதல் தேர்ச்சக்கரம் வரை!
அமெரிக்கா தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. ஜார்ஜ் ப்ளாயிட்டின் தொண்டையில் தன் முட்டியை மூர்க்கமாக ஊன்றிய டெரிக் சௌவின்ஸ், மானுடத்தின் குரல்வளையை மிதிப்ப தாய் நினைத்து விட்டார். அடங்கிய அந்தக் குரலின் ஆழ்ந்த மௌனம் அறத்தின் பேரொலியாய் அதிர்ந்து எதிரொலிக்கும் என்று அவர் எண்ணியிருக்க வாய்ப்பில்லை; உயிருக்கு நிறம் பிரிக்க நினைத்த அந்தக் கொடூரனின் செயலை நிறப்பிரிவுகளைப் புறந்தள்ளி மக்கள் ஒன்றுகூடிக் கண்டித்து எதிர்வினை ஆற்றியதுகூட வியப்பில்லை.
மதிப்புக்கூடும் கற்றாழை
அலோவேரா என்று அனைவராலும் அறியப்படும் சோற்றுக் கற்றாழை நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக மனித குலத்தின் பிணிகளைத் தீர்க்கும் மருந்தாகப் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் சோற்றுக் கற்றாழை, மருந்துக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்படுகிறது. இதிலிருந்து சேகரிக்கப்படும் சதைப் (Gel) பகுதி, பதப்படுத்தப் பட்டும் மதிப்புக்கூட்டியும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அவை உணவுப் பொருள், மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்பில் வெகுவாக பயன்படுத்தப்படுகின்றன.
மனம் வளர்ப்போம்
12 முதல் 15 வயது வரை பிள்ளைகள் பதின்பருவத்துக்குள் நுழையும் காலம். அது பெற்றோருக்கு அதிக சவால் நிறைந்த காலகட்டம். இந்த ஸ்பெஷல் காலகட்டத்தைப் பற்றி மனநல மருத்துவர் டாக்டர் விகாஸ் பிரபவ், விவிட் மைன்ட் க்ளினிக் கன்ஸல்டன்ட் நம்மோடு பேசுகிறார்.
வெட்டுக்கிளிகள் தமிழகம் வருமா?
ஒவ்வொரு பயிரின் கீழிருந்து உச்சி வரைக்கும் விட்டில்கள். அவைகள் மேயும் சத்தம் நெறுக் நெறுக் என்று காடெல்லாம் ஒன்று போலக் கேட்டது.
“இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை!
இந்த கொரோனா காலத்து லாக்டௌனால், ஒவ்வொரு தொழில்துறையும் ஒவ்வொரு விதமான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. அனைத்தும் ஒரே விதமான செய்திகளாக இருந்தாலும், பாதிப்புகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக... இதோ லாக்டௌனால் பாதிக்கப்பட்டு கேள்விக்குறியுடன் நிற்கும் நான்கு வெவ்வேறு துறையினரைச் சந்தித்தோம்...
முன்னோர் எல்லாம் மூடர்களல்ல!
கொரோனா வைரஸ் மரண அச்சத்தை ஏற்படுத்தினாலும் அதற்காகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகள் மனதுக்கு இதமளிக்கின்றன.
மசாலாக்களின் மகாராணி!
ஏலக்காய்க்கு ஒரு தனி மணமுண்டு. ஒரு உணவில் பலவிதப் பொருள்களைக் கலந்திருந்தாலும் ஏலக்காய் தனித்து தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தும். ஸ்பெஷல் டீ எனும்போது அது ஏலக்காய் டீ என்றுதானே அர்த்தம்? ஏலக்காய் சந்தேகமில்லாமல் ஸ்பெஷல்தான். ஏலக்காய் குறித்த பல விவரங்கள் வியப்பை அளிக்கக் கூடியவை.
பகை ஒழிக்கும் திருநாள்!
தேவர்களின் இடர் களைய, பனித்தலை முடித்த விரிசடைக் கடவுளாம் சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து அனல் பிழம்பாகத் தோன்றி, வாயு பகவானின் தாலாட்டில் மகிழ்ந்து, ஆகாய வெளியில் நீந்தி, சரவணப் பொய்கை எனும் நீரில் ஆவிர்பவித்து, சூரனை வதைக்க, பூமியில் பஞ்சபூத சொரூபமாக அவதரித்ததுதான் திருமுருக அவதாரம். இது நிகழ்ந்தது வைகாசி விசாகத் திருநாள்.
நல்லதா நாலு ஆப்ஸ்!
மொபைல் போன்களை ஆடம்பரத்துக்கு வைத்திருந்த காலமெல்லாம் போயே போச்சு. இப்போது அது அத்தியாவசியமாகவே ஆகிவிட்டது. ஆண், பெண், நண்டு, சிண்டு... என எல்லோரது கைகளிலும் செல்போன்கள் இருக்கின்றன. அதுவும் ஒரே போனில் இரண்டு சிம் கார்டுகள்! விஞ்ஞானத்தை விளையாட்டுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிராமல், பயனுள்ளதாகவும் ஆக்கிக் கொள்வது நமது சாமர்த்தியமே. நம் வீட்டுப் பெண்கள் அனைவரும் பயன்படுத்திப் பயனடையும்விதமாக, உபயோகமான சில ஆப்ஸ்-களை அடையாளம் காட்டுகிறோம். இதோ... நல்லதா நாலு ஆப்ஸ்!
திசை மாறும் பூங்காற்று!
சாரதா கண் கலங்குவதைப் பார்த்து ஸ்வேதா பதறிப் போனாள்.
“நம்மை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்கிறது இசை!”
சென்ற இதழ் தொடர்ச்சி...
செம மாஸ்(க்)!
கொரோனாவின் உபயத்தால், முகத்துக்கு மாஸ்க் அணிவது கட்டாயமாகியுள்ளது.
சத்துப் போகாமல் கீரை சமைக்க
முருங்கைக்கீரை, அகத்திக்கீரையை வதக்கும் போது கரண்டியின் காம்புப் பகுதியை வைத்துக் கிளறினால் கட்டியாக இல்லாமல் கீரை உதிரியாக இருக்கும்.
கடன் வாங்காதீங்க!
நிபுணர்கள் அட்வைஸ்
எஸ்.மீனாட்சி அம்மாளின் சமைத்துப்பார்!
வெல்ல மாங்காய் ஊறுகாய்
ஆக்ஸிஜன் தொழிற்சாலை!
கோடையில் தலையைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள எளிய வழி. வேப்பிலையை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றை கெட்டியாக எடுத்துக் கொண்டு, கற்றாழை ஜெல் பகுதியைப் பிசைந்து அதோடு சேர்த்துத் தலையில் தடவி ஊற விட்டுக் குளித்து வாருங்கள். சிறந்த பலன்கள் உறுதி!
அழகு டிப்ஸ்
பற்கள் மினுமினுப்பாகவும், வெண்மையாகவும் இருக்க வேண்டுமானால்...
அரிப்புக்கு மருந்தாகும் அருகம்புல்!
அருகம்புல் சாறில் மஞ்சள் உரசி, அதைப் பூசி வர அரிப்பு குணமாகும்.
அச்சுறுத்தல்!
இளநீர் இதமாகவும் சுவையாகவும் இருந்தது. காவல் நிலையத்தில் உட்கார்ந்து அருந்துவதாலேயே அது கசந்துவிடுமா என்ன! புவனாவின் முகத்தில் பூத்த புன்முறுவலை இன்ஸ்பெக்டர் இன்பராணி அவசரமாகப் பிரதிபலித்தார்.
"அல்வா செய்து அசத்தினார் என் கணவர்!"
இந்த ஊரடங்கு நாட்களில் மற்ற துறையினரைப் போலவே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்களும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார்கள். எப்போதும் ஷூட்டிங், பத்திரிகையாளர் சந்திப்பு என பரபரப்பாக இருக்கும் சின்னத்திரை - வெள்ளித்திரை பிரபலங்கள், வீட்டில் நான்கு சுவர்களுக்குள் எப்படி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், நட்சத்திர பிரபலமான கணேஷ் வெங்கட்ராமன் - நிஷா தம்பதியரை வீடியோகாலில் தொடர்பு கொண்டோம்.உடனே தொடர்பில் வந்த கணேஷ் வெங்கட்ராமன், “நிஷா மேடம் குழந்தையைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. அதுக்கு முன்னாடி நாம பேசிடலாம்” என்று மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டம் சொல்வது என்ன?
மீடியாக்களில், புலம் பெயர்ந்த தொழி லாளர்களின் பரிதாப நிலையைப் பார்க்கும்போது, யாராலும் கண்ணீரை அடக்க முடியாது.
பூர்ணிமா 2.0
பட்டிமன்றம் ராஜா
பூவே பூச்சூடவா!
பெண்கள் தலையில் பூ வைத்துக் கொள்வதால் பலவிதமான நன்மைகள் ஏற்படுகின்றன. எந்தெந்தப் பூக்கள் என்னென்ன நன்மைகள் தரும் தெரியுமா?
கப்பல் காதல் கற்பனை காவியம்!
உண்மையில், டைடானிக் கப்பல் மூழ்கிவிட்டது. ஆனால் 1997 டிசம்பர் 19ல் வெளியான ஜேம்ஸ் கேமரூனின் 'டைடானிக்' திரைப்படம் மிகவெற்றிகரமாக கரைசேர்ந்துவிட்டது. 11 ஆஸ்கார் விருதுகள். வெளியிட்ட அத்தனை நாடுகளிலும் இமாலய வெற்றி. பில்லியன் டாலர் என்கிற வசூலைத் தாண்டிய முதல் திரைப்படம்.