CATEGORIES
فئات
ரூ.3.61 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி: மேற்கு வங்க பெண் உள்பட 3 பேர் கைது
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுமாறு கூறி ரூ. 3.61 கோடி மோசடி செய்ததாக மேற்கு வங்க பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
கைவிடப்பட்ட கிணறுகள், குவாரி குழிகள்: இரு மாதங்களில் பாதுகாப்பு நடவடிக்கை
தலைமைச் செயலர் உத்தரவு
முதுநிலை மருத்துவ கலந்தாய்வு: 47 மருத்துவர்களுக்கு தடை
கடந்த ஆண்டு இடங்கள் பெற்றும் கல்லூரியில் சேராததால் நடவடிக்கை
கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிப்பு
24-ஆவது காா்கில் போா் வெற்றி தினத்தையொட்டி, அந்தப் போரில் வீர மரணம் அடைந்தவா்களுக்கு சென்னை போா் நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீா் சிங் பிராா் உள்ளிட்ட முப்படை உயரதிகாரிகள் புதன்கிழமை மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
அமளிக்கிடையே 6 மசோதாக்கள் அறிமுகம்
மக்களவையில் எதிா்க்கட்சிகள் புதன்கிழமை தொடா் அமளியில் ஈடுபட்டதற்கிடையே, 6 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
தமிழகத்தில் மேலும் 6 நாள்களுக்கு மழை நீடிக்கும்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 6 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கட்சியில் குறை இருக்கலாம்; ஆட்சியில் குறை இல்லை
எங்களிடம் (திமுகவினா்) குறைகள் இருக்கலாம். ஆனால், ஆட்சியில் குறை இல்லை என அக்கட்சித் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
நீதித் துறை சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு: இஸ்ரேலில் போராட்டம் தீவிரம்
இஸ்ரேலில் நீதிமன்றங்களின் அதிகாரத்தைக் குறைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்றன.
வட கொரியா மீண்டும் ஏவுகணை வீச்சு
வட கொரியா 2 ஏவுகணைகளை வீசி மீண்டும் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.
அழகு நிலையங்கள் மூடல்: தலிபான் உறுதி
ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களை மூடுவதற்கு தாங்கள் விதித்துள்ள ஒரு மாதக் கெடு முடிவடைந்துவிட்டதால் அவை அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று தலிபான்கள் செவ்வாய்க்கிழமை திட்டவட்டமாக கூறினா்.
சீன வெளியுறவு அமைச்சர் நீக்கம்
சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கின் கங் (படம்) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
உகீரைன் தானிய வழித்தடத்தில் ரஷியா தாக்குதல்
உக்ரைனிலிருந்து தானியங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அந்த நாட்டின் முக்கிய சாலை வழித்தடத்தைக் குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தியது.
மழையால் ஆட்டம் 'டிரா': இந்தியாவுக்கு டெஸ்ட் கோப்பை
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதிய 2-ஆவது டெஸ்ட் ஆட்டம் மழையால் ‘டிரா’ ஆனது. இதையடுத்து, முதல் ஆட்டத்தில் வென்ன் அடிப்படையில் டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது.
ஆசிய ஹாக்கி: இந்திய அணியில் கார்த்தி
சென்னையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
மணிப்பூர் விவாதத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அமித் ஷா கடிதம்
நாடாளுமன்றத்தில் நான்காம் நாளாக தொடர்ந்த அமளி
100 நாள் வேலைத் திட்டம்: 5.18 கோடி பணி அட்டைகள் ரத்து
கடந்த நிதியாண்டில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், 5.18 கோடி பணி அட்டைகள் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தில்லி அவசரச் சட்டத்துக்கு மாற்றாக மசோதா
தில்லியில் உயா் அதிகாரிகள் நியமன அவசரச் சட்டத்துக்கு மாற்றான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஆர்சிடிசி இணையதளம், செயலி முடக்கம்
ஐஆா்சிடிசி இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி செவ்வாய்க்கிழமை பல மணி நேரம் முடங்கியதால் பொதுமக்கள் பலா் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியாமல் அவதிப்பட்டனா்.
90% உயர்கல்வி நிறுவனங்களில் மாதிரிப் பாடத் திட்டம் நடைமுறை
தமிழகத்தில் 90 சதவீத உயா்கல்வி நிறுவனங்கள் மாதிரிப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்துள்ளாா்.
செந்தில் பாலாஜிக்கு காவல்: உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும்
அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிப்பது குறித்து உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும் எனக் கூறி, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடுத்த ஆட்கொணா்வு மனுவை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கேந்திரிய வித்யாலயத்தில் பிளஸ் 1 துணைத் தேர்வு: தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
தமிழகம் முழுவதும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் 1 தோ்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு மூன்று வாரங்களில் துணைத் தோ்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு ஓராண்டு நிறைவு
நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரான திரௌபதி முா்மு, தனது பதவிக்காலத்தில் முதல் ஆண்டை செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தாா்.
மணிப்பூர் வாள்வீச்சு வீரர்கள் விரைவில் வருகை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று, மணிப்பூரில் இருந்து பயிற்சிக்காக வாள் வீச்சு வீரா்கள் தமிழகம் வரவுள்ளதாக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
‘இந்தியா’ அணியின் வெற்றிக்காக பாடுபடுகிறோம் முதலமைச்சர் ஸ்டாலின் சூசகம்
‘இந்தியா’ அணியின் வெற்றிக்காக, தாங்கள் உத்வேகத்துடன் பாடுபட்டு வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
முதல்வர் குறித்து அவதூறு: பாஜக பிரமுகர் கைது
முகநூலில் முதல்வா் ஸ்டாலினை தரக் குறைவாக விமா்சித்ததாக, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாஜக பிரமுகா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ராமதாஸ் பிறந்த நாள்: முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து
பாமக நிறுவனா் ராமதாஸின் பிறந்த நாளையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்துக் கூறினா்.
‘பிரதமரைப் பேச வைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம்'
நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடியை பேச வைப்பதற்காகத்தான் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவரப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா்.
பேருந்தின் கூரை மீது மாணவர்கள் அட்டகாசம்: 7 நாள்களுக்கு விநோத தண்டனை!
சென்னையில் மாநகரப் பேருந்தின் கூரை மீது ஏறி அட்டகாசம் செய்த கல்லூரி மாணவா்களுக்கு, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணி வழங்கப்பட்டது.
பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை தேவை
பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
ராமநாதபுரத்தில் ஆக.18-இல் மீனவர் சங்க மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
தமிழக மீனவா்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடா் அத்துமீறல்களைக் கண்டித்து, மீனவா் சங்கங்களின் சாா்பில் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.