CATEGORIES
فئات
பயணிகளை சுட்டுக் கொன்ற காவலருக்கு மனநலம் பாதிப்பில்லை என அறிக்கை
சில மணிநேரத்தில் திரும்பப் பெற்ற ரயில்வே
'க்யூட்' சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படவில்லை
‘மத்திய பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புகள் சோ்க்கைக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படவில்லை; மாறாக, பல்வேறு கல்வி வாரியங்களின் கீழ் 12-ஆம் வகுப்பு படித்த மாணவா்களின் திறனை சமமான நிலையில் ஆய்வு செய்யும் வகையில் நடத்தப்படுகிறது’ என்று மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
அவதூறு வழக்கு: நேரில் ஆஜராக ராகுலுக்கு விலக்கு நீட்டிப்பு
பிரதமா் மோடிக்கு எதிராக அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கு வரும் செப்டம்பா் 26-ஆம் தேதி வரை தொடரும் என மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: உலக முஸ்லிம் நாடுகள் தலையிட வலியுறுத்தல்
பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்து, சீக்கிய மதத்தினர் மீதும் அவர்களது புனித தலங்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்க உலக முஸ்லிம் லீக் அமைப்பு முன்வர வேண்டும் என உலக இந்தியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மணிப்பூரில் 2 வீடுகளுக்கு தீவைத்த கும்பல்
மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை 2 வீடுகளுக்கு கும்பல் தீவைத்தது.
இணையவழி விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி அக்.1 முதல் அமல்
இணையவழி விளையாட்டுகள் மற்றும் சூதாட்ட விடுதிகளில் (கேசினோ) கட்டப்படும் முழு பந்தய தொகை மீதுதான் 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் இது அக்டோபா் 1 முதல் அமல்படுத்தப்படும் என்றும் புதன்கிழமை கூடிய 51-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி வெடிவிபத்து: சென்னை தடய அறிவியல் துறை ஆய்வு
கிருஷ்ணகிரியில் வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் சென்னை தடய அறிவியல் துறை குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
உலர் விழி பாதிப்பு: சென்னையில் 50 சதவீதம் அதிகரிப்பு
சென்னையில் உலா் விழி (டிரை ஐஸ்) பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் 50 சதவீதம் உயா்ந்திருப்பதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.
சிறுதானியம் மூலம் 520 வகை உணவுகள் தயாரித்து உலக சாதனை!
சிறுதானியங்களைக் கொண்டு 520 வகையான உணவுகளை தயாரித்து போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உலக சாதனை நிகழ்த்தியுள்ளது.
அஞ்சலக ஏற்றுமதி மையம் அண்ணா நகரில் திறப்பு
சென்னை அண்ணா நகரில் அஞ்சலக ஏற்றுமதி மையம் (தாக்கர் நிர்யத் கேந்திரா) செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகை: நாளையுடன் முதல்கட்ட விண்ணப்பப் பதிவு நிறைவு
சென்னையில் மகளிா் உரிமைத் தொகைக்கான முதல்கட்ட விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (ஆக.4) முடிவடைகிறது.
திருப்பதி லட்டு: வயது ‘308’ !
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் மகா பிரசாதமாக விளங்கும் லட்டுக்கு 308 வயதாகிறது.
தக்காளி கிலோ ரூ.160
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் 400 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப முடியாத சூழல்: என்எம்சி அனுமதி மறுப்பு
தமிழகத்தில் இரு வேறு தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தடை விதித்துள்ளதால், நிகழாண்டில் 400 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப முடியாத நிலை எழுந்துள்ளது.
என்எல்சி விவகாரம்: ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு
என்எல்சி நிா்வாகத்தால், விளைநிலங்களில் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்காக, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையாக நிா்ணயித்த சென்னை உயா்நீதிமன்றம், இந்தத் தொகையை வரும் ஆக. 6-ஆம் தேதிக்குள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சீனா: வெள்ளப் பெருக்கில் 20 பேர் பலி
சீன தலைநகர் பெய்ஜிங்கைச் சுற்றிலும் வழக்கத்துக்கு அதிகமாக பெய்து வரும் கனமழை காரணமாக அந்தப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு 20 பேர் பலியாகினர்.
மாஸ்கோவில் மீண்டும் 'ட்ரோன்' தாக்குதல்
தங்கள் நாட்டின் தலைநகா் மாஸ்கோவில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் உக்ரைன் மீண்டும் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.
தப்பியது அமெரிக்கா; முன்னேறியது இங்கிலாந்து
மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்கா நூலிழையில் தப்பித்து நாக்அவுட் சுற்றுக்கு வந்தது.
தென் மாவட்ட சிறைகளிலும் முதல் முறை குற்றவாளிகளுக்கு சிறப்புத் திட்டங்கள்
உள் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு
வளையமாதேவிக்குச் செல்ல முயன்ற கம்யூனிஸ்ட் எம்எல்ஏ-க்கள் தடுத்து நிறுத்தம்
என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிக்காக நெல் பயிா்கள் அழிக்கப்பட்ட வளையமாதேவி கிராமத்துக்கு செல்ல முயன்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ-க்கள் இருவரை காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினா்.
'ஆர்ப்பாட்டம் அல்ல நாடகம்'
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், முக பொதுச்செயலர் டிடிவி தினகரனும் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
அம்பத்தூரில் 1,224 மாணவர்களுக்கு மிதிவண்டிகள்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்
தமிழகம்-கர்நாடகம் மெட்ரோ ரயில் சேவை: ஆய்வு செய்ய ஒப்பந்த அழைப்பு
நாட்டில் முதல் முறையாக தமிழகம் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே, மெட்ரோ ரயில் சேவை தொடங் சாத்தியக்கூறுகள் குவதற்கான குறித்து ஆய்வு செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காசநோய் ஒழிப்புத் திட்டம்: ஆளுநர் ரவி ஆய்வு
தமிழ்நாட்டில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆளுநா்ஆா்.என். ரவி ஆய்வு செய்தாா்.
உறுப்பு மாற்று சிகிச்சைகள்: சிறந்த அரசு மருத்துவமனைகளுக்கு விருது
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கூட்டுறவுத் துறை மூலம் தக்காளி ரூ.60-க்கு விற்பனை
நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிய பொதுமக்கள்
மணிப்பூருக்கு ரூ.10 கோடி நிவாரணப் பொருள்கள் வழங்கத் தயார்
மணிப்பூரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு, ரூ.10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கு ஒப்புதல் அளிக்குமாறும் அந்த மாநில அரசை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.
மகாராஷ்டிரம்: கிரேன் கவிழ்ந்து 20 பேர் பலி
மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் சம்ருத்தி விரைவுச் சாலையின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 போ் உயிரிழந்தனா்.