CATEGORIES
Kategorien
சர்வதேச குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் நிஹாத், நித்துவுக்கு தங்கப்பதக்கம்
73வதுஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் நடந்தது. இதில் நேற்று பெண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிஹாத் ஜரீன் 41 என்ற கணக்கில் 3 முறை ஐரோப்பிய சாம்பியனான டெடியானோ காப்பை (உக்ரைன்) தோற் கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
உக்ரைன் விவகாரம் : பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆலோசனை கூட்டம்
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
ரஷிய படையினர் 1,000 பேர் உயிரிழப்பு: உக்ரைன் ராணுவம் அறிவிப்பு
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் லட்சக்கணக்கிலான படை வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை குவித்தது. போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வேண்டுகோள் வைத்தது.
உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர்களை சந்திக்கும் ராகுல் காந்தி
தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கவுன்சிலர்கள் அனைவரும் 28 ந்தேதி மதியம் சத்தியமூர்த்தி பவன் வந்து விடவேண்டும் என்று கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் மலைக்கு செல்ல மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி ஆண்டு தேதி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஆய்வுகள், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் அதிகமாக வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்க திட்ட தொடக்க விழா கோடம்பாக்கம் மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கம் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்களை அவர்களுக்கு வழங்கினார்.
உக்ரைன்-ரஷியா மோதல்: சென்னை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தமிழக மாணவர்கள் கதறல்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததையடுத்து அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.
ரஷிய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழப்பு: உக்ரைன் அறிவிப்பு
ரஷிய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1 லட்சம் படை வீரர்களை குவித்தது.ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.
புதிய சாதனை படைத்த தனுஷ் பாடல்
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் தனுஷ்.
தூத்துக்குடி வெடி விபத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்
தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிவாரணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிம்புவாக களம் இறங்கும் நடிகர் நாகசைதன்யா?
கடந்த ஜனவரி மாதத்தில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் தந்தை தன்னுடைய சுரேஷ் புரொடக்சன்ஸ் மூலம் மாநாடு திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் மற்றும் பிற மொழியில் ரீமேக் செய்வதற்கான உரிமத்தை பெற்றிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கு எதிராக இந்தியா வெற்றி இஷான் கிஷனுக்கு ரோகித் சர்மா பாராட்டு
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
உக்ரைனில் உதவி தேவைப்படும் தமிழர்களுக்கு விரைந்து உதவ மு.க. ஸ்டாலின் உத்தரவு: தொடர்புக்கான முகவரி வெளியீடு
உக்ரைனில் உதவி தேவைப்படும் தமிழர்கள் தொடர்பு கொள்ள இமெயில் முகவரியை அளித்துள்ளார் தி.மு.க. எம்.பி. அப்துல்லா.
தடை செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட இன்ஜின்கள் கடலில் பயன்படுத்தினால் போராட்டம்
சிதம்பரத்தில் 32 மீனவ கிராம தலைவர்கள் முன்னிலையில் தீர்மானம்
மூண்டது போர்: உக்ரைன் மீது பல்முனை தாக்குதலை தொடங்கியது ரஷியா
ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் மீது உடனடி தாக்குதல் நடத்தப்பட்டது.
திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கநகை பறிமுதல்
திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்கநகை சிக்கியது.
வேலைவாய்ப்பு முகாம்
உசிலம்பட்டியில் ஊரக மற்றும் நகரப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் 188 ஆம்புலன்ஸ் சேவை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் 188 ஆம்புலன்ஸ் சேவையை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற யாதவ மக்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும்
யாதவ மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வலியுறுத்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. கவுன்சிலர்களுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சென்னை மாநகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தகுதி
20 ஓவர் உலக கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதன் மூலம் இந்த இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காத பா.ஜ.க. அரசு: சோனியா காந்தி குற்றச்சாட்டு
உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 3 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது.தேர்தல் நடைபெற உள்ள மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
தாய் மொழிப்பற்றை வீட்டில் இருந்து தொடங்குவோம் - கவர்னர் தமிழிசை அழைப்பு
உலகத் தாய் மொழி நாளை கொண்டாடும் வகையில் “தாய் மொழி போற்றுதும்" என்ற தலைப்பில் புதுவை தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கினை கவர்னர் தமிழிசை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
உலக சாம்பியனை தோற்கடித்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு சச்சின் பாராட்டு
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றனர்.
தோனிக்கு 36 முறை ஆக்ஷன் சொன்னேன்.. விக்னேஷ் சிவனின் பதிவு
சிம்பு நடிப்பில் வெளியான ”போடா போடி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதன்பிறகு நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கினார். .
புதுச்சேரியில் 27 பேருக்கு கொரோனா தொற்று
புதுவையில் 2 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
‘பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன் - கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்று பரவலும் அதனையடுத்து வந்த ஊரடங்கு விதி முறைகளும் ஒவ்வொருவரின் அன்றாடத்திலும், திட்டங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பும் பிற தயாரிப்புப் பணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. பிக்பாஸ் நிகழ்ச்சி என் மனதிற்கு உகந்த, நான் விரும்பிச் செய்கிற ஒன்று.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எம்.எஸ்.தோனி
பல படங்களை இயற்றியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்நிலையில் விக்னேஷ் சிவன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படம் அனைவரையும் முணுமுணுக்க வைத்துள்ளது.
கள்ள ஓட்டு போட்டதாக கூறி சாலை மறியல்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது.