CATEGORIES
Kategorien
இந்தி நடிகரை மணந்தார் கத்ரினா கைப்
பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும், நடிகர் விக்கி கவுசலும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் ராஜஸ்தானில் உள்ள பழமையான கோட்டையில் நேற்று நடந்தது.
விராட் கோலி பதவி விலக மறுத்ததால் நீக்கம்
கிரிக்கெட் வாரியம் அதிரடி
விடுதியில் தங்கி படித்த அண்ணா பல்கலைக்கழக 763 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை
சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த வீரர்களுக்கு முதலமைச்சர் அஞ்சலி
துக்கத்தை அனுசரிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு துண்டு அணிந்தபடி ராணுவ அதிகாரிகள் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தினார்.
ராணுவ பயிற்சி பெற்ற ஊரிலேயே உயிரிழந்த பிபின் ராவத்
தான் படித்த கல்லூரியில் நடக்க கூடிய கருத்தரங்கில் பங்கேற்று, பயிற்சி ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுவதற்காக வந்தபோது தான் பிபின் ராவத் விபத்தில் சிக்கி பலியானார்.
பிபின் ராவத் படத்திற்கு ஆளுநர், அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை
இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மற்றும் அவர்களுடன் பயணித்த 11 ராணுவ வீரர்கள் என 13 பேர் நேற்று குன்னூரில் நடந்த ஹெலிக்காப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மூத்த மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யப்பட்டதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாநிலங்களவை செயல்பட முடியாமல் முடங்கியுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர், கொரட்டூரில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
முகப்பேர் மேற்கு, பாடிகுப்பம் ரெயில் நகர் பகுதியில் மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்ட சுரங்கப்பாதையை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற பாராளுமன்றக் குழு கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மத்திய அரசின் கடிதம் திருப்பி அனுப்பியது ஏன்?- விவசாய சங்க தலைவர் பேட்டி
போராட்டத்தை கைவிட்டு விவசாய அமைப்புகள் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்தது.
அமெரிக்காவில் மாவீரர் நெப்போலியனின் போர்வாள் ரூ.21.11 கோடிக்கு ஏலம்
1799 ம் ஆண்டு மாவீரர் நெப்போலியன் ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்திய போது எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் 5 ஆயுதங்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன.
புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க கோரிக்கை
உறை கிணறு அமைத்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தஞ்சை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகளின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை
தமிழகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் மு.கஸ்டாலின்
பணி நியமன ஆணை
மழையால் சேதமான பயிர்களுக்கு நிவாரண தொகை வழங்க கோரிக்கை
விவசாயிகள் கோரிக்கை
வான்கடே டெஸ்ட்: இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
ஹேட்லி சாதனையை அஸ்வின் சமன் செய்தார்
இரு நாடுகள் தொடரில் அதிக விக்கெட்
ஒமைக்ரான் வைரஸ் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
டெல்லியில் இன்று இந்தியா-ரஷியா உச்சி மாநாடு 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கட்கிழமை) டெல்லி வருகிறார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையே 10 ஓபந்தங்கள் கையெழுத்தாகிறது.
அம்பேத்கர் நினைவு தினம் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை
அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பிரபாஸின் படத்திலிருந்து வெளியான காதல் கீதம்
அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாமின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக காதல் ததும்பும் கீதமான ‘தரையோடு தூரிகை' பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி விசாரணை கேட்டு இந்திய குடியரசு கட்சி ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை
தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு நேரடி விமான சேவை மும்பை விழித்தெழு இயக்கம் கோரிக்கை
தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி, தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு நேரடி விமான சேவையை வழங்க வேண்டும் என மும்பை விழித்தெழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிறீதர் தமிழன் தூத்துக்குடி விமான நிலைய இயக்குனரிடம் மனு அளித்தார்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா போராட்டம்
திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தினை ஊராட்சி மன்றத் தலைவர்கள் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கன்வாடி உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு அரசாணை வெளியீடு
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்கள் பயன்பெறும் வண்ணம், அவர்களின் ஓய்வுபெறும் வயதை 58லிருந்து 60 ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
மெகா தடுப்பூசி முகாம்கள் மீண்டும் சனிக்கிழமைக்கு மாற்றம்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதன் மூலம் ஒரே நாளில் பல லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
வங்கி ஊழியர்கள் 16, 17ந் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம்
வங்கி ஊழியர்கள் வருகிற 16 மற்றும் 17ந் தேதிகளில், தொடர்ந்து 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
மதுபான விளம்பரத்தில் நடிகைகள் - வலுக்கும் எதிர்ப்பு
நடிகர், நடிகைகள் சினிமாவை தவிர்த்து சொந்த தொழில்கள் மூலமும் விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். தரமற்ற பொருட்களை அவர்கள் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளம்பரப்படுத்திய தமன்னா கோர்ட்டு வழக்கு சர்ச்சையில் சிக்கினார்.
தமிழ்நாட்டில் எய்ட்ஸ் தொற்று இல்லா நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்: மு.க.ஸ்டாலின்
உலக எய்ட்ஸ் தினமான இன்று, தமிழ்நாட்டில் தொற்று இல்லா நிலையை உருவாக்கிட உறுதியேற்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.