CATEGORIES
Kategorier
இலங்கை கடற்படை தாக்குதலில் விசைப்படகு மூழ்கி மீனவர் உயிரிழப்பு
ராமேசுவரத்தில் உறவினர்கள் மறியல்
வாள்வெட்டில் துண்டான கையை விட்டுவிட்டு ஓட்டம்
மாரவில, பஹல வலஹாபிட்டிய பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் 23 வயதுடைய இளைஞன் ஒருவனின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டது.
பணவீக்கம் உயர்ந்தது.
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 1.7 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜூலை மாதம் 2.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
"தான் குற்றமற்றவர்”
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் தான் குற்றமற்றவர் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை வேட்பாளர்களிடையே "50% கஷ்டம்”
போரின் காரணமாக தங்களை வளர்த்துக் கொண்டார்கள். இவை எல்லாம் மக்களுக்கு தெரியும் ரணிலுக்கு 92 பேர் ஆதரவு என்றால் மற்றையவர்கள் இதே மாதிரியான மனோ நிலையில் இருப்பார்கள் என நம்புகின்றேன்
விருந்து கொடுத்ததால் இளம்பெண் வன்புணர்வு
ஹைதராபாத்தில், 24 வயதான பெண் ஒருவர், தனக்கு வேலை கிடைத்ததற்காக தனது நண்பர்களுக்கு விருந்து கொடுத்த போது அவரின் பால்ய நண்பனாலேயே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனை 14 ஆவது மாடியிலிருந்து குதிக்க வைத்த இணைய விளையாட்டு
இணையவழி விளையாட்டுக்கு அடிமையான 16 வயது சிறுவன் அந்த விளையாட்டின் டாஸ்கை செய்து முடிப்பதற்காக தனது வீட்டின் 14ஆம் தளத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் இயக்கத் தலைவர் படுகொலை
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.
இந்தியாவுக்கெதிரான தொடரில் இலங்கைக் குழாமில் |நிஷான் மதுஷ்க
இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமில் துடுப்பாட்ட வீரர் நிஷான் மதுஷ்க இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டுள்ள 24 வயதான மதுஷ்க, ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும்.
பரிஸ் 2024: ஐ. அமெரிக்காவுக்கு : தங்கம் வென்று கொடுத்த பைல்ஸ்
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் உளப் பிரச்சினைகள் காரணமாக 2020டோக்கியோ ஒலிம்பிக்கில் விலகியிருந்த ஐக்கிய அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோனே பைல்ஸ், தனது அபார திறமை மூலம் பரிஸ் 2024ஆம் ஆண்டு போட்டிகளில் ஐக்கிய அமெரிக்க அணிக்கு முதலாவது தங்கத்தை வென்று கொடுத்துள்ளார்.
இலங்கையை வெள்ளையடித்த இந்தியர்
இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில் இலங்கையை இந்தியா வெள்ளையடித்தது.
“இணையத்தளம் ஊடாக வியாபார பதிவு”
இணையத்தள மூடாக வியாபார பதிவுகளை (Online Business Registration) ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.
இந்திய மீனவர்களில் : 30 பேர் விடுதலை
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 23 பேர், செவ்வாய்க்கிழமை(30) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
"சாதகமான எதிர்காலத்துக்கு சக்திகளை ஒன்று திரட்டினோம்”
சுற்றுப்புற பிரதேசங்களில் ரணில் ஜனாதிபதி என்று போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்.
காஸ் போகும் வரை காத்திருந்த அமரர் ஊர்தி
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியாஉடபுஸ்ஸல்லாவ பிரதான வீதியின் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது.
சஜித் சார்பில் கட்டுப்பணம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆயுதங்களுடன் மௌலவி மாட்டினார்
மட்டக்களப்பு மாஞ்சோலை பிரதேசத்தில் மௌலவி ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
“92 பேரில் சிலர் நடிக்கின்றனர்"
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து யார் வெளியேறினாலும் கட்சியை விட்டு வாக்காளர்கள் வெளியேற மாட்டார்கள். மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர வேறு எவர் கட்சியை விட்டு வெளியேறினாலும் அவர்களால் வாக்குகளைப் பெற முடியாது என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, புதன்கிழமை (31) தெரிவித்தார்.
‘ஜனாதிபதி சாரணர் பதக்கம்'
சாரணர் இயக்கம், கெடட் படைப் பிரிவு, இளைஞர் படையணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புகளை சகல வழிகளிலும் பலப்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பரந்த பங்களிப்பைப் பெறுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தாய்ப்பாலூட்டல் வாரம் ஆரம்பம்
தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக்கவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் திகதி வரையிலான ஒரு வாரம் சர்வதேச தாய்ப்பாலூட்டல் வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
கனடா செல்ல இருந்தவர் கழுத்து நெரித்து கொலை
வவுனிக்குளத்தில் இருந்து புதன்கிழமை (30) சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
VFS விசா ஒப்பந்தத்துக்கு எதிராக TISL மனுத் தாக்கல்
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவதற்கான இலத்திரனியல் பயண அனுமதி முறையை (ETA) கையாளுவதற்கு தனியார் நிறுவனங்களைக் ஒப்பந்தம் செய்யும் போது அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் நடைமுறை மீறல்கள் மற்றும் பொது மக்களின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை ஜூலை 30 ஆம் திகதி தாக்கல் செய்தது.
மூன்று குழுக்களை நியமித்தார் ஜனாதிபதி
இரானில் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனி படுகொலைச் செய்யப்பட்டதை அடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
எரிபொருளுக்கு தட்டுப்பாடு
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், ஜூலை 31 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைக்கப்படுவது ஏன் யூகித்து, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை கொள்வனவு செய்யாத காரணத்தினால் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"மொட்டின் முடிவை ஏற்கவே முடியாது”
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மனசாட்சி உள்ளவர்கள் என்றவகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, கடிதமொன்றை புதன்கிழமை (31) அனுப்பிவைத்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆயுர்வேத வெற்றிக் கிண்ணத் தொடர் கல்முனை சம்பியன்
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆயுர்வேத நலன்புரிச் சங்கத்தால் நடாத்தப்பட்ட “கிழக்கு மாகாண ஆயுர்வேத வெற்றிக் கிண்ணம் - 2024\" கிரிக்கெட் தொடரில் கல்முனை பிராந்திய ஏ அணி சம்பியனானது.
நிலச்சரிவுக்கு தமிழகம் சார்பில் 5 கோடி நிவாரணம்
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 5 கோடியை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
காதலனுடன் சேர்ந்து தாயைக் கொலை செய்த சிறுமி
மேற்கு வங்க மாநிலத்தில் 14 வயது சிறுமியும் அவரது காதலனும் சேர்ந்து சிறுமியின் தாயைக் கொலை செய்து நாடகமாடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பரிஸ் 2024: வெளியேறிய நடால்
பினான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் பில் ஆண்களுக்கான தனிநபர் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஸ்பெய்னின் ரஃபேல் நடால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
கிராம சேவக உதவியாளர் பாகுபாடு பெண் ஆர்ப்பாட்டம்
நவாலி, வடக்கு ஜே/134 கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகரின் உதவியாளராக செயல்படும் பெண்ணொருவர், உதவித் திட்டங்களில் பாகுபாடு காட்டுவதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண் குறித்த கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.