CATEGORIES
Kategorier
அமுல்படுத்துவது யார்?
பொலிஸ் மா அதிபர் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை யார் நடைமுறைப்படுத்துவது என்பதே தற்போதுள்ள பிரச்சினை ஆகவே, அந்த தீர்ப்பு அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சபை முதல்வரும் அமை ச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
"மாமனிதன் கலாநிதியை தமிழினம் இழந்தது"
தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு.தமிழர்கள் இந்த நாட்டில் தங்களுக்கு உரித்தான தனித் தேசமாக வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று மிகவும் ஆணித்தரமாக சிங்கள மக்கள் மத்தியில் ஒரு படித்த கலாநிதியாக எடுத்துக்கூறிய மாமனிதன் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவை தமிழினம் இழந்து விட்டதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம். பி. யான எஸ்.ஸ்ரீதரன் சபையில் அஞ்சலி செலுத்தினார்.
தொழிலுக்குச் செல்லுமாறு ஜீவன் வேண்டுகோள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் விசேட அறிக்கையொன்றை வியாழக்கிழமை (25) மாலை விடுத்துள்ளார்.
“முஸ்லிம்களின் வேதனையை
குறைத்து மதிப்பிட வேண்டாம்\"
“நானும் குதிப்பேன்”
2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாதாள உலக குழுவினருக்கே - அதிக மகிழ்ச்சி
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து இடைநிறுத்தம் உயர் நீதிமன்றத்தின் தடைஉத்தரவால் பாதாள உலக குழுவினரே அதிக மகிழ்ச்சியடைந்துள்ளனர் என அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை - “சட்டமாக்குவதை அனுமதிக்க முடியாது"
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சட்டமாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நானும் போட்டி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, சுதந்திர சதுக்கத்தில் வியாழக்கிழமை (25) நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
‘எடெர்சனின் சிற்றி எதிர்காலம் நிச்சயமில்லை'
நடப்புப் பருவகாலத்தில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் கோல் காப்பாளரான எடெர்சன் கழகத்தில் இருப்பாரா என தனக்கு உறுதியாகத் தெரியாதென அக்கழகத்தின் முகாமையாளர் பெப் குவார்டியோலா தெரிவித்துள்ளார்.
மோர்கன் நிராகரித்தார்
இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான பயிற்சியாளர் மத்தியூ மொட்டைப் பிரதியிடுவதை அவ்வணியின் முன்னாள் அணித்தலைவர் ஒய்ன் மோர்கன் நிராகரித்துள்ளார்.
கிழக்கு ஆசிரிய உதவியாளர்களுக்கு நற்செய்தி
கிழக்கு மாகாணத்தில் கடந்த 10 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரிய உதவியாளர்களை, ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
பார்வை மாற்றுத்திறனுள்ள புதிய 'பார்பி பொம்மை'
'பார்பி பொம்மைகள்' உலக அளவில் பரவலாக அறியப்படும் பிரபல பொம்மையாக உள்ளன.
கிழக்கில் பிரகாசித்த நௌசாத்
தேசிய விளையாட்டு விழாவின் ஓரங்கமான கிழக்கு மாகாண விளையாட்டு விழாவானது அண்மையில் நடைபெற்றபோது, ஒலுவிலைச் சேர்ந்த பி.எம். நௌசாத் ஐந்து தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப்பதக்கம் உள்ளடங்கலாக ஆறு பதக்கங்களை சுவீகரித்து தேசிய மட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் முன்னேறினார் ஹரி ப்ரூக்
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இங்கிலாந்தின் ஹரி ப்ரூக் முன்னேறியுள்ளார்.
"எந்த மாநிலத்தையும் பறக்கணிக்கவில்லை”
மத்திய பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது\" என ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே குற்றம்சாட்டிய நிலையில், அதனை மறுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், \"பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. பாரபட்சம் காட்டவில்லை\" என பதிலடி கொடுத்தார்.
“மன்னிப்பு தீர்வாகாது”
தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை படுகொலைகள் நடந்து 41 வருடங்களின் பின்னர் அமைச்சர் ஒருவரால் தற்போது சொல்லப்பட்ட மன்னிப்பு என்ற வார்த்தை எந்த வகையிலும் தமிழருக்குத் தீர்வாக அமைந்துவிடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
"முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்கவும்”
கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்த விடயத்தில் அரசு மன்னிப்புக் கேட்டு பிரச்சினையில் இருந்து தப்பியோ முயற்சிக்கக் கூடாது.
இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பு
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் தடைக்கல்லாக செயற்பட்டுவரும் களனிவெளி உள்ளிட்ட சில கம்பனிகளுக்கு எதிராகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தோட்டத் தொழிலாளர்கள் பணிபுறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
“வேட்பாளர்களை கட்டுப்படுத்த கட்டணத்தை இலட்சமாக்கவும்"
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை வரையறுக்க கட்டுப்பணத்தை இலட்சமாக்குமாறு எதிரணியின் சுயாதீன எம்.பியான டலஸ் அழகப்பெரும வலியுறுத்தினார்.
ஜனாஸாக்கள் எரித்தமைக்கான மன்னிப்பை ஏற்கமுடியாது
கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்தமைக்கு மன்னிப்புக் கோரும் அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்க முடியாது. முஸ்லிம் சமூகம் ஒரு போதும் ஏமாறப்போவதில்லை முஸ்லிம் எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) போர்க்கொடி தூக்கினர்.
வீதியில் காயப்போட்டு காவல் காத்தவர் மீது சூடு
அறுவடை செய்த நெல்லினை வீதியில் காயப்போட்டுக் காவல் காத்து உறங்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி விவசாயியும் கமக்கார அமைப்பின் செயலாளருமான செல்லையா கிருஸ்ணராஜா (வயது 42) மீது, புதன்கிழமை (24) அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
மொட்டுவின் முட்டு இன்றேல் ரணில் அவுட்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்காவிட்டால் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.
வர்த்தமானி வாபஸுக்கு வருந்தினார் வடிவேல்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் நாளாந்த சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சு வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்பட்டுள்ளமை வருத்தமளிக்கிறது என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
தேஷபந்து தென்னகோனுக்கு இடைக்காலத் தடை
ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட 08 தரப்பினர் மனுக்களை தாக்கல் செய்தனர் கடந்த வியாழக்கிழமை அன்று சுமார் எட்டு மணி நேரம் விசாரணை நிடித்திருந்தது அரசியலமைப்பு பேரவையினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை
"250 மனவர்கள் கைது; நடவடிக்கை தேவை”
ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
இனி யாருக்கு கடிதம் எழுதுவது?
என்னுடைய பாதுகாப்பு தொடர்பில், இனி நான் யாருக்கு கடிதம் எழுதுவது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான இரா.சாணக்கியன், பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவுக்கெதிரான இலங்கைக் குழாமில் சந்திமால்
இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமில் தினேஷ் சந்திமால் இடம்பெற்றுள்ளார்.
போதை பொருளுடன் I6 பேர் கைது
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸார் நடாத்திய 'யுக்திய' போதை ஒழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் 16 பேர் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ். ரமேஷ் தெரிவித்தார்.
“தேர்தல் திகதியை உடனடியாக அறிவிக்கவும்”
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்ற தினத்தையும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற திகதியையும் உடனடியாக அறிவிக்குமாறு சட்டத்தரணி சுனில் வட்டகல கோரிக்கை விடுத்துள்ளார்.
"ஜே.வி.பி, தூண்டி விட்டு வீதிக்கு இறக்குகின்றது”
வீதிக்கிறக்குகின்றனர் தொழிற்சங்கத்தினரை ஜே.வி. பியினர் தூண்டி அதனால் தொழிலுக்கு ஆபத்து ஏற்படும் ஊழியர்களிடமிருந்து ஜே.வி.பி.சட்டத்தரணிகள் பணம் உழைக்கின்றனர் என மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.