CATEGORIES
Kategorier
ஊழல் முறைகேடு நிறைந்தது எடப்பாடி ஆட்சி தான்
தமிழ்நாட்டில் மிக மோசமான ஊழல் முறைகேடுகள் நிறைந்த ஆட்சியாக எடப்பாடி ஆட்சிதான் இருந்தது, அதிமுகவுக்கு அவர் முடிவு கட்டிவிடுவார் என டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
பிரதமர் பதவியை நிராகரித்து விட்டேன் நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு
‘நீங்கள் பிரதமர் பதவிக்கு வர விரும்பினால் ஆதரவு தருவோம்’ என எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தன்னிடம் கூறியதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்திய, ஈழத் தமிழர்கள் தயாரிக்கும் ரத்தமாரே
டிஎஸ்எஸ் ஜெர்மனி பிலிம்ஸ் மற்றும் வி2 கிரியேஷன், நியூஜெர்சி என்ற பட நிறுவனங்கள் சார்பில் சுமார் 13 ஈழம் மற்றும் இந்திய தமிழர்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ரத்தமாரே’.
கடைசி ஆதரவையும் இழந்த பெண்ணுக்கு மம்மூட்டி ஆறுதல்
வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த பிறகு சமீபத்தில் தனது வருங்கால கணவரையும் இழந்த பெண்ணுக்கு நடிகர் மம்மூட்டி ஆறுதல் கூறியுள்ளார்.
தோலுக்கு லேசர் சிகிச்சை பெறும் சமந்தா - மீண்டும் மயோசிடீஸ் பாதிப்பு
மயோசிடீஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவுக்கு தோல் பிரச்சனையும் ஏற்பட்டது. அந்நோயிலிருந்து மீண்டு வந்தவர், இப்போது மீண்டும் பாதிக்கப்பட்டு தோல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்.
ஆண்டிபட்டி வாலிபருக்கு சீனப்பெண்ணுடன் டும்..டும்..
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்தவர்கள் அமுதன் – சரவணகுமாரி தம்பதி. இவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்று சான்பிரான்சிஸ்கோ நகரில் வசிக்கின்றனர்.
2025 பிப்ரவரிக்குள் அதிமுக ஒன்றிணையும் நம்புகிறார் வைத்திலிங்கம்
வருகிற 2025 பிப்ரவரிக்குள் அதிமுக ஒன்றிணையும் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுக உரிமை மீட்புக்குழு இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தஞ்சாவூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இபிஎஸ் அணியில் எப்போதும் ஓபிஎஸ் அணி இணைய முடியாது என்று இபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் சொல்லி உள்ளார்.
தமிழக மீனவர்களுக்கு மொட்டை இலங்கை அரசை இந்தியா கண்டிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி கைது செய்யப்பட்ட 8 மீனவர்களில் மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 பேரும் தலா 750 ஆயிரம் அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டனர்.
மிலாடி நபியை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும்
மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளில் கட்டுமான கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க 3 குழு -மாநகராட்சி நடவடிக்கை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் மாபெரும் சர்வே நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ஒரே நாளில் 6 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
விரைவில் தேர்தல் நடக்க உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில்
கேரளாவில் ஓணம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
சபரிமலை, குருவாயூர் கோயில்களில் சிறப்பு பூஜை
சினிமாவில் தோற்றதால் ஆன்மிக சொற்பொழிவாளர் அவதாரம் பாலியல் பேச்சும்... மகாவிஷ்ணுவின் லீலையும்... சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா வரை கிளைகள் எப்படி?
பெண்கள் பள்ளிகளை குறிவைத்தது ஏன்? சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா வரை கிளைகள் எப்படி?
விசிக சாதிக்கட்சி இல்லையா? மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி திருமாவளவன் எல்கேஜிகான் - அன்புமணி கடும் தாக்கு
மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி பட்டம் பெற்றவர்கள், திருமாவளவன் எல்கேஜிதான் படித்திருக்கிறார் என பாமக தலைவர் அன்புமணி தாக்கியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாமக சாதி கட்சி என திருமாவளவன் கூறியுள்ளார்.
பாஜ, பாமக குறித்து பேச திருமாவளவனுக்கு யோக்கியதை இல்லை
‘பாஜ, பாமக பற்றி பேச திருமாவளவனுக்கு யோக்கியதை இல்லை’ என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கொல்லங்குடியில் நேற்று நடந்த பாஜ உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்ற ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டை அரசை மிரட்டவே நடத்துகிறார் என நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.
முத்ரா கடன் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்- செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 11, 12 தேதிகளில் கோவை வந்த அவர், முத்ரா கடன் வழங்கியிருப்பது குறித்து ஆதாரமற்ற புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கிறார்.
சிறப்பாகவும், துணிச்சலாகவும் பணியாற்றிய திருச்சி எஸ்.பி. வருண்குமார் உட்பட 107 பேருக்கு அண்ணா பதக்கம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சிறப்பாகவும், துணிச்சலாகவும் பணியாற்றிய திருச்சி எஸ்.பி. வருண்குமார் உட்பட 107 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை போல எந்த மாநிலத்திலும் மோசமான ஆளுநர் இருந்தது இல்லை - வைகோ காட்டம்
சென்னை காமராஜர் அரங்கத்தில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் அண்ணா குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மற்றும் ஏராளமான மதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
மூத்த குடிமக்களுக்கான புரட்டாசி மாத ஆன்மிகப் பயணம் வரும் 21ம் தேதி முதல் தொடக்கம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
மூத்த குடிமக்களுக்கான புரட்டாசி மாத வைணவ கோயில் ஆன்மிகப் பயணம் வரும் 21ம் தேதி தொடங்குகிறது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். சென்னை ஓட்டேரி, சேமாத்தம்மன் கோயிலில் ரூ. 1.58 கோடியிலான கருங்கல் கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை அண்ணா அறிவாலய முகப்பில் திமுக பவள விழா லட்சினை திறப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
அண்ணா அறிவாலய முகப்பில் திமுக பவள விழா லட்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக வழியில் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிறைவேற்றிடும் நோக்கத்துடன் அண்ணாவால் 1949ம் ஆண்டு தொடங்கப்பட்டு கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட அரசியல் பேரியக்கம் திமுக. 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி, இந்த 2024ம் ஆண்டு தனது பவள விழா நிறைவினைக் கொண்டாடுகிறது.
முன்னாள் காஞ்சிபுரம் எம்பி விஸ்வநாதன் தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக பதவி ஏற்பு
முன்னாள் காஞ்சிபுரம் எம்பி விஸ்வநாதன், தெலங்கானா மாநில மேலிட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக பதவி ஏற்றார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேளதாளங்கள் முழங்க, பிரமாண்ட ஊர்வலத்துடன் சென்னையில் 1500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
கடற்கரை பகுதிகளில் கூட்டம் அலைமோதியது, போலீசார் பாதுகாப்பால் அசம்பாவிதங்கள் தவிர்ப்பு
டெல்லி முதல்வர் பதவியிலிருந்து 2 நாளில் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா
நேர்மையானவன் என மக்கள் சான்றளித்தால் மட்டுமே மீண்டும் பதவி ஏற்பதாக அறிவிப்புட
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த துரித நடவடிக்கைக்கு நன்றி
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்களும் ஹெலிகாப்டர் மூலம் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 13 ஆண்கள், 17 பெண்கள் உட்பட 30 பேர் கடந்த 1ம் தேதி ஆன்மிக சுற்றுலாவாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆதி கைலாஷ் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு ரயிலில் செல்ல திட்டமிட்டு இருந்தனர்.