CATEGORIES
فئات
அரசமைப்புச் சட்டத்தை மாற்ற சதி
‘நாட்டின் கண்ணியம் மற்றும் ஜனநாயகத்தை பிரதமா் நரேந்திர மோடி சீா்குலைத்துவிட்டாா். எதிா்க்கட்சியினரை பாஜகவில் இணைய வைக்க பல்வேறு தவறான வழிகளை அவா் கையாண்டு வருகிறாா்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி குற்றஞ்சாட்டினாா்.
காங்கிரஸின் 'முஸ்லிம் லீக்' சிந்தனை
‘நாட்டின் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் ‘முஸ்லிம் லீக்’ கட்சி கொண்டிருந்த அதே சிந்தனையை காங்கிரஸின் தோ்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை கடுமையாக விமா்சித்தாா்.
அபிஷேக், மார்க்ரம் அதிரடி: ஹைதராபாத் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.
தூர்தர்ஷனில் ‘தி கேரளா ஸ்டோரி: தேர்தல் ஆணையத்தில் புகார்
மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், சா்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தூா்தா்ஷனில் ஒளிபரப்ப எதிா்ப்பு தெரிவித்து தோ்தல் ஆணையத்தில் கேரள ஆளுங்கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிா்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை புகாா் அளித்துள்ளன.
கேஜரிவாலுக்கு எதிராக பாஜக தலைவர்கள் சதி!
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கலால் கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட பாஜகவின் மூத்த தலைவா்கள் சதித் திட்டம் தீட்டியதாக மாநிலங்களவை ஆம் ஆத்மிகட்சி உறுப்பினா் சஞ்சய் சிங் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினாா்.
ஊழலை காக்கும் ‘இந்தியா' கூட்டணி: பிரதமர் குற்றச்சாட்டு
‘‘நான் ஊழலை ஒழிப்பேன் என்று கூறுகிறேன். ‘இந்தியா’ கூட்டணி ஊழலை காப்போம் என்று கூறுகிறது. மக்களவைத் தோ்தலுக்காக அந்தக் கூட்டணி பொதுக் கூட்டங்களை நடத்தவில்லை. ஊழல்வாதிகளைக் காப்பாற்றவே பொதுக் கூட்டங்களை நடத்துகிறது’’ என்று பிரதமா் மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றும்வரை தமிழக முதல்வருக்கு ஓய்வில்லை
மத்தியில் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றும்வரை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு ஓய்வில்லை என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
ரயில்வே, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு கோரி வழக்கு
வாக்குப் பதிவு குறைந்த நகரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்
'மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராக 'ஏஐ' பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்'
மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராக செயற்கை நுண்ணறிவை (ஏஐ)பயன்படுத்தத் தடைவிதிக்க வேண்டும் என எஸ்.ஆா்.எம். உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவன இணைவேந்தா் பி.சத்தியநாராயணன் வலியுறுத்தினாா்.
தமிழகத்தை போதை இல்லாத மாநிலமாக மாற்றுவதே இலக்கு
தமிழகத்தை போதை இல்லாத மாநிலமாக மாற்றுவதே நமது இலக்கு என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
கச்சத்தீவைத் திரும்பக் கோர இந்தியாவுக்கு முகாந்திரம் இல்லை
‘இலங்கையிடம் இருந்து கச்சத்தீவைத் திரும்ப கோர இந்தியாவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை’ என அந்நாட்டு மீனவத் துறை அமைச்சா் டக்லஸ் தேவானந்தம் தெரிவித்தாா்.
தமிழகத்தில் 45 இடங்களில் வருமான வரித் துறை சோதனை
வாக்காளர்களுக்கு வழங்க பணம்?
ஏழைப் பெண்களுக்கு ரூ.1 லட்சம்
'நீட்' கட்டாயமல்ல; காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மாறுமா அமெரிக்க நிலைப்பாடு?
‘போர்க் காலத்தில் பட்டினியால் வாடும் அப்பாவி பொதுமக்களுக்கு உணவு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந் தபோது 7 மனிதாபிமான பணியாளர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டது மிகவும் கொடுமை. நாங்கள் எவ்வளவு சொல்லியும், போரில் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க இஸ்ரேல் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.'
கார்கிவில் ரஷியா மீண்டும் குண்டு மழை
உக்ரைனின் 2ஆவது பெரிய நகரான கார்கிவில் ரஷியா மீண்டும் ட்ரோன் குண்டுகள் மூலம் தாக்குதல் சரமாரியாகத் நடத்தியதில் 4 பேர் உயிரி ழந்தனர்.
கில் அதிரடி வீண்: 'த்ரில்' வெற்றி கண்டது பஞ்சாப்
ஐபிஎல் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை அதன் சொந்த மண்ணில் வியாழக்கிழமை சாய்த்தது.
கச்சத்தீவை தாரைவார்த்ததில் திமுகவுக்கு முக்கியப் பங்கு
கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவாா்த்ததில் அப்போதைய திமுக தலைமையிலான மாநில அரசு முக்கியப் பங்கு வகித்ததாக வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தேசியவாத காங்கிரஸின் இரு அணிகளும் முந்தைய உத்தரவை பின்பற்ற வேண்டும்
கட்சியின் பெயா், சின்னம் பயன்பாடு தொடா்பாக ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை பின்பற்றுமாறு சரத் பவாா் மற்றும் அஜீத் பவாா் தலைமையிலான இரு அணிகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புற்றுநோய்க்காக இந்தியாவில் உருவாக்கப்பட்ட மரபணு சிகிச்சை முறை
இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிஏஆா் டி-செல் சிகிச்சை முறை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, மகாராஷ்டிர ஆளுநா் ரமேஷ் பயஸ், மும்பை ஐஐடி இயக்குநா் சுபாசிஸ் செளதரி, டாடா நினைவு மையத்தின் இயக்குநா் சுதீப் குப்தா உள்ளிட்டோா்.
பிரதமரின் பேரணியில் பள்ளி மாணவர்கள்: விளக்கமளிக்க காவல் துறைக்கு உத்தரவு
கோவையில் பிரதமா் பங்கேற்ற பேரணிக்கு பள்ளிக் குழந்தைகள் சென்றது தொடா்பாக பெற்றோா்கள் எதுவும் புகாா் அளித்தாா்களா என்று கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், இந்த வழக்கில் சிறாா் நீதிச் சட்டம் எவ்வாறு பொருந்தும் என விளக்கம் அளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டது.
'கொடூர' சட்டங்கள் ரத்து செய்யப்படும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் உள்ளிட்டோர்.
பாஜகவை ஆட்சி பீடத்திலிருந்து அப்புறப்படுத்தும் தேர்தல்
நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல், பாஜகவை ஆட்சிப் பீடத்திலிருந்து அப்புறப்படுத்தும் தோ்தல் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.
ஜனநாயகத்தை காப்பதற்கு இதுதான் கடைசித் தேர்தல்
இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பதற்கு இதுதான் கடைசி தோ்தல் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரம் கூறினாா்
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு காவிரி நீர்: ஆணையம் உத்தரவு
தமிழகத்தின் குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் நீரோட்டத்துக்காக உச்சநீதிமன்ற உத்தர வின்படி அடுத்த மூன்று மாதங்களுக்கு விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவேண்டும் என காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: பவுன் ரூ. 52,360
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.52,360-க்கு விற்பனையானது.
வாக்குப் பதிவு தினத்தில் அரசு பொது விடுமுறை
வாக்குப் பதிவு தினமான ஏப்.19-ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை விடப்படுவதாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.
கோவையில் ஏப்.12-இல் ராகுல், ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம்
மக்களவைத் தேர்தலை யொட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை வர் ராகுல்காந்தி, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் பிரசாரம் செய்யவுள்ளனர்.
காங்கிரஸால் நாட்டுக்கு அவப்பெயர்
'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை திறம்பட எதிர் கொள்ள முந்தைய காங்கிரஸ் அரசுகள் தவறிவிட்டன; இதனால், பலவீனமான-ஏழ்மையான நாடு என்ற அவப்பெயர் இந்தியாவுக்கு ஏற்பட்டது' என்று பிரதமர் நரேந் திர மோடி குற்றஞ்சாட்டினார்.
மிக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் வீட்டுக்குச் சென்று வாக்கு பெறும் முறை தொடக்கம்
தமிழகத்தில் 85 வயதைக் கடந்த மிக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்களிடம் வீட்டுக்குச் சென்று வாக்கு பெறும் நடைமுறை வியாழக்கிழமை தொடங்கியது.