CATEGORIES
فئات
இலங்கையைக் கண்டிக்காதது ஏன்?
மீனவர் பிரச்னையில் பிரதமருக்கு ஸ்டாலின் கேள்வி
‘ஆளுநராக இருந்த நான் அக்காளாக வந்துள்ளேன்': தென்சென்னை வாக்காளர்களுக்கு தமிழிசை மடல்
‘ஆளுநராக இருந்த நான் உங்கள் அக்காளாக திரும்பி வந்துள்ளேன்’ என்று தென்சென்னை மக்களவைத் தொகுதி வாக்காளா்களுக்கு அந்தத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் திறந்த மடல் எழுதியுள்ளாா்.
காஸாவில் உடனடி போர் நிறுத்தம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
காஸாவில் உடனடியாக போா் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திங்கள்கிழம தீா்மானம் நிறைவேற்றியது.
மாஸ்கோவில் தாக்குதல் நடத்தியவர்கள் யார்?
மாஸ்கோவில் 137 பேரை பலி கொண்ட தாக்குதலை நடத்தியது இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் என்று அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் உறுதி செய்தாா்.
கோலியின் அதிரடியால் பெங்களூரு முதல் வெற்றி
பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் வெற்றியைப் பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
உஜ்ஜைன் மகாகாளேஸ்வர் கோயில் கருவறையில் தீ விபத்து 14 அர்ச்சகர்கள் காயம்
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரில் அமைந்த பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வா் கோயிலில் ஹோலி பண்டிகையையொட்டி திங்கள்கிழமை அதிகாலை நடந்த ஆரத்தி பூஜையின்போது கருவறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 அா்ச்சகா்கள் காயமடைந்தனா்.
ராமர் கோயில் திறப்பால் நிகழாண்டு ஹோலி பண்டிகை கூடுதல் சிறப்பு
அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட்டதால் நிகழாண்டு ஹோலி பண்டிகை மிகவும் சிறப்புவாய்ந்தது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
சிங்கப்பூர் பிரதமர், அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
சிங்கப்பூா் பிரதமா் லீ ஸெயின் லூங், வெளியுறவு துறை அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் திங்கள்கிழமை சந்தித்தாா்.
இதுவரை ரூ.5.26 கோடி மதிப்பில் தங்கம் பறிமுதல் ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன்
சென்னையில் இதுவரை ரூ. 5.26 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் ரூ. 59.13 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
சென்னைக்குள்பட்ட 3 தொகுதிகளில் 35 பேர் வேட்புமனு தாக்கல்
சென்னை மாவட்டத்துக்குள்பட்ட வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகளில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 35 வேட்பாளா்கள் திங்கள்கிழமை தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.
சென்னையில் ஹோலி கொண்டாட்டம்: வட மாநிலத்தினர் உற்சாகம்
ஹோலி பண்டிகையொட்டி சென்னையில் வடமாநிலத்திவா்கள் வண்ணப் பொடிகளை ஒருவா் மீது ஒருவா் தூவி கோலாகலமாகக் கொண்டாடினா்.
தமிழகத்தை வஞ்சித்தவர் பிரதமர் மோடி முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தை மோடியைப் போல வஞ்சித்த பிரதமர் இந்திய வரலாற்றிலேயே இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பு|
ஒரே நாளில் குவிந்த திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள்
காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே உடனடி போா்நிறுத்தத்தை வலியுறுத்திய ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், ‘காஸா மக்களுக்கு உயிா்காக்கும் மனிதாபிமான உதவிகள் அதிகம் தேவைப்படும் நேரமிது’ என்றாா்.
ஒஸாகா, அல்கராஸ் முன்னேற்றம்: சபலென்கா வெளியேற்றம்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் பிரிவில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை அா்யனா சபலென்கா தோற்று வெளியேறினாா். ஆடவா் பிரிவில் முன்னணி வீரா் காா்லோஸ் அல்கராஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா்.
சஞ்சு சாம்ஸன்-ரியான் பராக் அதிரடி
கேப்டன் சஞ்சு சாம்ஸன்-ரியான் பராக் அதிரடி ஆட்டத்தால் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
துணிச்சலின் தலைநகர் லடாக்
நாட்டின் துணிச்சலின் தலைநகராக லடாக் திகழ்வதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் சூடுபிடித்தது மக்களவைத் தேர்தல் களம்
முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தோ்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது.
நாட்டின் நலன் கருதி தே.ஜ. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்
நாட்டின் எதிா்கால நலனைக் கருத்தில் கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்களிப்பது அவசியம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் கேட்டுக் கொண்டாா்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைவது உறுதி
மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைவது உறுதியாகிவிட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா
சென்னை வடபழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனா்.
காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், திருமலை பெருமாள் கருட சேவை
பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில்
காவலிலிருந்து செயல்படும் தில்லி முதல்வர் கேஜரிவால்!
தில்லியில் தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள இடங்களில் போது மான தண்ணீர் டேங்கர்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார். அமலாக்கத் துறை காவலில் இருந்தபடி இந்த உத்தரவை கேஜரிவால் பிறப்பித்துள்ளார்.
பாஜக 5-ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மேனகா காந்தி, கே.சுரேந்திரன், நடிகை கங்கனாவுக்கு வாய்ப்பு
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 111 பேர் அடங்கிய பாஜக வேட்பாளர்களின் 5-ஆவது பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
தேனியில் டி.டி.வி. தினகரன், திருச்சியில் செந்தில்நாதன்
அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
காவிரி பிரச்னையில் ஸ்டாலின் மௌனம்
காவிரி பிரச்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மௌனம் காக்கிறார் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் மீண்டும் திறப்பு
சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம், மேல்பாதியில் வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்ட அருள்மிகு திரெளபதி அம்மன் திருக்கோயில்.
உக்ரைன் மின் கட்டமைப்பில் ரஷியா தாக்குதல்
உக்ரைனின் மிகப் பெரிய நீா் மின் நிலையம் உள்பட அந்த நாட்டின் மின்சாரக் கட்டமைப்பின் மீது ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா்; 10 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களின் இல்லங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
கோலாகலமாகத் தொடங்கியது ஐபிஎல் பெங்களூரை வென்றது சென்னை
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியின் 17-ஆவது சீசன், சென்னையில் கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வென்றது.
இந்தியா-பூடான் இடையே ரயில் போக்குவரத்து
பிரதமா் நரேந்திர மோடி இருநாள் அரசுமுறைப் பயணமாக பூடானுக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தாா்.