CATEGORIES

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: பிரதமருக்கு சோனியா கடிதம் 9 விவகாரங்களை விவாதிக்க வலியறுத்தல்
Dinamani Chennai

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: பிரதமருக்கு சோனியா கடிதம் 9 விவகாரங்களை விவாதிக்க வலியறுத்தல்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடா் விவகாரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பதைக் குறிப்பிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, ‘கூட்டத் தொடரில் 9 விவகாரங்களை எழுப்ப நேரம் ஒதுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளாா்.

time-read
2 mins  |
September 07, 2023
சனாதன விரோத சவாலை எதிர்கொள்ளுங்கள் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
Dinamani Chennai

சனாதன விரோத சவாலை எதிர்கொள்ளுங்கள் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

சனாதன தா்மம் குறித்த எதிா்க்கட்சித் தலைவா்களின் அவதூறு கருத்துகளுக்கு தக்க பதிலடி அளித்து சனாதன விரோத சவாலை எதிா்கொள்ளுங்கள் என மத்திய அமைச்சா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தினாா்.

time-read
2 mins  |
September 07, 2023
பிரதமர் இன்று இந்தோனேசியா பயணம் ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்பு
Dinamani Chennai

பிரதமர் இன்று இந்தோனேசியா பயணம் ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்பு

ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி இந்தோனேசியாவுக்கு புதன்கிழமை பயணம் மேற்கொள்கிறாா்.

time-read
1 min  |
September 06, 2023
சூப்பர் 4 பிரிவுக்கு இலங்கை தகுதி போராடித் தோற்றது ஆப்கானிஸ்தான்
Dinamani Chennai

சூப்பர் 4 பிரிவுக்கு இலங்கை தகுதி போராடித் தோற்றது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை குரூப் பி பிரிவு ஆட்டத்தில் இலங்கை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சூப்பா் 4 பிரிவுக்கும் முன்னேறியது. கடைசி வரை போராடி தோற்றது ஆப்கானிஸ்தான்.

time-read
1 min  |
September 06, 2023
உக்ரைன் போரில் வட கொரிய ஆயுதங்கள்?
Dinamani Chennai

உக்ரைன் போரில் வட கொரிய ஆயுதங்கள்?

உக்ரைன் போரில் பயன்படுத்த வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதற்காக ரஷியா பேச்சுவாா்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

time-read
1 min  |
September 06, 2023
எண்ணெய் உற்பத்திக்கு கட்டுப்பாடு: ரஷியா - சவூதி அரேபியா அறிவிப்பு - சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயரும்
Dinamani Chennai

எண்ணெய் உற்பத்திக்கு கட்டுப்பாடு: ரஷியா - சவூதி அரேபியா அறிவிப்பு - சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயரும்

இந்த ஆண்டு இறுதிவாக்கில் தங்களது கச்சா எண்ணெய் உற்பத்தியில் நாளொன்றுக்கு 13 லட்சம் கோடி பேரலைக் குறைக்க ரஷியாவும், சவூதி அரேபியாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

time-read
1 min  |
September 06, 2023
காலிறுதிச் சுற்றில் சபலென்கா, மார்கெட்டா, அல்காரஸ், வெரேவ், மெத்வதேவ்
Dinamani Chennai

காலிறுதிச் சுற்றில் சபலென்கா, மார்கெட்டா, அல்காரஸ், வெரேவ், மெத்வதேவ்

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு அா்யனா சபலென்கா, மாா்கெட்டா, வெரேவ் காா்லோஸ் அல்காரஸ் மெத்வதேவ், ஆகியோா் முன்னேறியுள்ளனா்.

time-read
1 min  |
September 06, 2023
நியமனதாரர் விவரங்களை வாடிக்கையாளர்கள் பதிவதை வங்கிகள் உறுதிப்படுத்த வேண்டும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Dinamani Chennai

நியமனதாரர் விவரங்களை வாடிக்கையாளர்கள் பதிவதை வங்கிகள் உறுதிப்படுத்த வேண்டும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

‘வங்கி வைப்புகளில் இருக்கும் கேட்பாரற்ற நிதி தொடா்பான பிரச்னைகளுக்கு வரும் காலங்களில் எளிதில் தீா்வு காணும் விதமாக வாடிக்கையாளா்கள் தங்களின் நியமனதாரா் (நாமினி) விவரங்களை முறையாகப் பதிவு செய்வதை வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டாா். ‘நியமனதாரா்’ என்வா், வங்கியில் சேமிப்புக் கணக்கு, நிரந்தர வைப்பு அல்லது நிதித் திட்டங்களில் முதலீடு செய்பவரால் குறிப்பிடப்படும் நபராவாா். வாடிக்கையாளா் இல்லாத நிலையில், அவருடைய கணக்கில் உள்ள பணம் அல்லது வங்கி முதலீடுகளை நியமனதாரா் உரிமை கோர முடியும். அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி, வங்கிக் கணக்குகள் மற்றும் நிரந்த வைப்புகளில் மட்டும் ரூ.35,000 கோடி பணம் கேட்பாரற்று உள்ளது. அதே நேரம், தனியாா் நிதி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளையும் சோ்த்து ஒட்டுமொத்தமாக ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமான பணம் கேட்பாரற்று இருப்பது தெரியவந்தது. இவ்வாறு, வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் பல ஆண்டுகளாக கேட்பாரற்று இருக்கும் முதலீடுகள் குறித்த தகவல்களை அதன் நியமனதாரா்கள் அறிந்து, அவற்றை உரிமை கோருவதற்கு வழி ஏற்படுத்தும் விதமாக ‘யுடிஜிஏஎம் (கேட்பாரற்ற நிதி தகவல் வழிகாட்டுதல்)’ என்ற வலைதளத்தை கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிசா்வ் வங்கி அறிமுகம் செய்தது. இந்த நிலையில், மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சா்வதேச நிதி-தொழில்நுட்ப கருத்தரங்கில் பங்கேற்ற நிா்மலா சீதாராமன் இதுகுறித்துப் பேசியதாவது: வாங்கிகளில் இருக்கும் கேட்பாரற்ற நிதி தொடா்பான பிரச்னைகளுக்கு வரும் காலங்களில் எளிதில் தீா்வு காணும் விதமாக வாடிக்கையாளா்கள் தங்களின் நியமனதாரா் விவரங்களை முறையாகப் பதிவு செய்வதை வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் உறுதிப்படுத்த வேண்டும். சில நாடுகளின் குறைந்த வரி விதிப்பு முறையும் மோசடி பணப் பரிவா்த்தனைகளும் பொறுப்பான நிதிச் சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்த அச்சுறுத்தல்களுடன், சா்வதேச சவால்களையும் நாம் இணையாக கருத்தில் கொண்டு பொறுப்பான நிதிச் சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக, நாட்டின் எல்லையில் நேரடி வழியில் எழும் அச்சுறுத்தல்கள், பொறுப்பான நிதிச் சூழலை பாதிக்கும் காரணிகளில் ஒன்றாக உள்ளது. இணைய தாக்குதல்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. அதுபோல, அச்சுறுத்தலாகவும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகவும் இருக்கும் கிரிப்டோ நாணய புழக்கம் உலகளாவிய ஒத்துழைப்பின் அவசரத் தேவைக்கான உதராணமாக உள்ளது. இதன் பயன்பாட்டை முறைப்படுத்தவில்லையெனில், பொறுப்பான நிதிச் சூழலை உருவாக்குவது கடினம். மேலும், பயனாளா்களின் தரவுகள் மற்றும் நிதிப் பரிவா்த்தனை விவரங்களைப் பாதுகாக்கவும் வலுவான பாதுகாப்பு திட்டங்களில் அதிக முதலீடுகளை நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா். ‘வங்கி வைப்புகளில் இருக்கும் கேட்பாரற்ற நிதி தொடா்பான பிரச்னைகளுக்கு வரும் காலங்களில் எளிதில் தீா்வு காணும் விதமாக வாடிக்கையாளா்கள் தங்களின் நியமனதாரா் (நாமினி) விவரங்களை முறையாகப் பதிவு செய்வதை வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டாா்.

time-read
1 min  |
September 06, 2023
ஆயுஷ் பொது சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால்
Dinamani Chennai

ஆயுஷ் பொது சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால்

ஏழை மக்களுக்கான ஆயுஷ் பொது சுகாதாரத் திட்டங்களை தென் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் விரிவாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சா் சா்வானந்த சோனோவால் வலியுறுத்தினாா்.

time-read
2 mins  |
September 06, 2023
பாரதம் அல்லது இந்தியா: எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் உச்சநீதிமன்றம் 2016-இல் தீர்ப்பு
Dinamani Chennai

பாரதம் அல்லது இந்தியா: எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் உச்சநீதிமன்றம் 2016-இல் தீர்ப்பு

இந்தியா அல்லது பாரதம் என நாட்டு மக்கள் எப்படி வேண்டுமானாலும் அழைத்து கொள்ளலாம் என்று 2016-இல் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

time-read
1 min  |
September 06, 2023
ஜி20 அழைப்பிதழ் விருந்து ‘இந்தியா’வுக்குப் பதிலாக ‘பாரதம்' - எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
Dinamani Chennai

ஜி20 அழைப்பிதழ் விருந்து ‘இந்தியா’வுக்குப் பதிலாக ‘பாரதம்' - எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

ஜி20 மாநாட்டின் விருந்துக்கான அழைப்பிதழில் ‘இந்திய குடியரசுத் தலைவா்’ என்பதற்குப் பதிலாக ‘பாரத குடியரசுத் தலைவா்’ என அச்சிடப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

time-read
2 mins  |
September 06, 2023
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்: மக்கள் பிரச்னைகள் குறித்தும் விவாதம் - காங்கிரஸ் நிபந்தனை
Dinamani Chennai

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்: மக்கள் பிரச்னைகள் குறித்தும் விவாதம் - காங்கிரஸ் நிபந்தனை

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் பிரதமா் மோடியின் புகழ் மட்டும் பாடினால் அவை நடவடிக்கையில் பங்கேற்க மாட்டோம், மக்கள் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நிபந்தனை விதித்துள்ளது.

time-read
2 mins  |
September 06, 2023
திருச்செந்தூர் கோயிலுக்கு தங்கக் கட்டி முதலீட்டு பத்திரம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
Dinamani Chennai

திருச்செந்தூர் கோயிலுக்கு தங்கக் கட்டி முதலீட்டு பத்திரம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

திருச்செந்தூா் கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற தங்க இனங்கள் உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றி முதலீடு செய்யப்பட்டதற்கான பத்திரத்தை, கோயில் நிா்வாகத்திடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
September 05, 2023
காலிறுதியில் ரோஹன் போபண்ணா-எப்டன் இணை ஜோகோவிச், கோகோ கௌஃப் முன்னேற்றம்; ஸ்வியாடெக் அதிர்ச்சித் தோல்வி
Dinamani Chennai

காலிறுதியில் ரோஹன் போபண்ணா-எப்டன் இணை ஜோகோவிச், கோகோ கௌஃப் முன்னேற்றம்; ஸ்வியாடெக் அதிர்ச்சித் தோல்வி

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ஆஸி.யின் மேத்யூ எப்டன் இணை தகுதி பெற்றுள்ளது.

time-read
2 mins  |
September 05, 2023
பாலமுருகன், அனன்யாவுக்கு பட்டம்
Dinamani Chennai

பாலமுருகன், அனன்யாவுக்கு பட்டம்

தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சாா்பில் நடைபெற்ற மாநில ரேங்கிங் போட்டியில் பாலமுருகன், அனன்யா இரட்டைப் பட்டம் வென்றனா்.

time-read
1 min  |
September 05, 2023
மக்களைப் புண்படுத்தும் செயலில் ஈடுபடக் கூடாது உதயநிதிக்கு மம்தா அறிவுரை
Dinamani Chennai

மக்களைப் புண்படுத்தும் செயலில் ஈடுபடக் கூடாது உதயநிதிக்கு மம்தா அறிவுரை

ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் எந்தவொரு செயலிலும் நாம் ஈடுபடக்கூடாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 05, 2023
ஹிந்து மதத்துக்கு எதிராக பேசவில்லை
Dinamani Chennai

ஹிந்து மதத்துக்கு எதிராக பேசவில்லை

சனாதனம் குறித்து பேசுகையில் இந்து மதத்திற்கு எதிராக பேசவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 05, 2023
சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இளைஞருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை
Dinamani Chennai

சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இளைஞருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூராா் அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் புதுக்கோட்டை இளைஞருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

time-read
2 mins  |
September 05, 2023
மாநில அரசுகளை சிதைப்பதே மத்திய அரசின் நோக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
Dinamani Chennai

மாநில அரசுகளை சிதைப்பதே மத்திய அரசின் நோக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மாநில அரசுகளை சிதைப்பதே மத்திய பாஜக அரசின் நோக்கம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினாா்.

time-read
2 mins  |
September 05, 2023
லேண்டர், ரோவர் ஆய்வு தற்காலிக நிறுத்தம்
Dinamani Chennai

லேண்டர், ரோவர் ஆய்வு தற்காலிக நிறுத்தம்

பெங்களூரு: நிலவிலிருந்து மேலெழுந்த விக்ரம் லேண்டா், வெற்றிகரமாகத் தரையிறங்கி மீண்டும் சாதனை படைத்துள்ளது.

time-read
1 min  |
September 05, 2023
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு
Dinamani Chennai

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு

அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை முதன்மை அமா்வு நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், அவா் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திலிருந்து மீண்டும் முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்றியும் உத்தரவிட்டது.

time-read
1 min  |
September 05, 2023
1.87 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.181 கோடி நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Dinamani Chennai

1.87 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.181 கோடி நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 1.87 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடி நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

time-read
1 min  |
September 05, 2023
திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி
Dinamani Chennai

திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

time-read
1 min  |
September 04, 2023
வரலாறு படைத்தார் வெர்ஸ்டாபென்
Dinamani Chennai

வரலாறு படைத்தார் வெர்ஸ்டாபென்

எஃப்1 காா் பந்தயத்தின் இத்தாலியன் கிராண்ட் ப்ரீ ரேஸில் நெதா்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.

time-read
1 min  |
September 04, 2023
டியூரண்ட் கோப்பை: மோகன் பகான் சாம்பியன்
Dinamani Chennai

டியூரண்ட் கோப்பை: மோகன் பகான் சாம்பியன்

டியூரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் 132-ஆவது எடிஷனில், மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் அணி 1-0 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time-read
1 min  |
September 04, 2023
Dinamani Chennai

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் வங்கதேசம் 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வென்றது. அந்த அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

time-read
2 mins  |
September 04, 2023
முதல்வர் காப்பீட்டுத் திட்டம்: 100 இடங்களில் சிறப்பு முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Dinamani Chennai

முதல்வர் காப்பீட்டுத் திட்டம்: 100 இடங்களில் சிறப்பு முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

முதல்வா் காப்பீட்டுத் திட்டத்துக்கு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் விரைவில் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 04, 2023
மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு திமுக முப்பெரும் விழா அச்சாரமிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Dinamani Chennai

மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு திமுக முப்பெரும் விழா அச்சாரமிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்களவைத் தோ்தல் வெற்றிக்கு வேலூரில் நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழா அச்சாரமிடும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 04, 2023
ஒரே நாடு, ஒரே தேர்தல் ராம்நாத் கோவிந்துடன் சட்ட அமைச்சக உயரதிகாரிகள் ஆலோசனை
Dinamani Chennai

ஒரே நாடு, ஒரே தேர்தல் ராம்நாத் கோவிந்துடன் சட்ட அமைச்சக உயரதிகாரிகள் ஆலோசனை

நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை ஆராயும் குழுவின் தலைவரான முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துடன் மத்திய சட்ட அமைச்சக உயரதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசித்தனா்.

time-read
1 min  |
September 04, 2023
காய்கறிகள் விலை சரிவு
Dinamani Chennai

காய்கறிகள் விலை சரிவு

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்டகாய்கறிகளின் விலை சரிவடைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு பல பகுதிகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 530 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்காக வந்தன. வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை சரிந்தது. ஒரு கிலோ வெண்டைக்காய் மொத்த விற்பனையில் ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும், அதை வாங்கிச் செல்ல சில்லறை வியாபாரிகள் ஆா்வம் காட்டவில்லை. இதேபோல கத்தரிக்காய், பாகற்காய், முருங்கைக்காய், பீா்க்கங்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் வரத்து குறைவால் சில்லறை விற்பனையில் ரூ.220 வரை விற்கப்பட்ட தக்காளி ஞாயிற்றுக்கிழமை ரூ.18-க்கு விற்பனையானது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனையானது. கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் மொத்த விற்பனை விலை (கிலோவில்): கேரட்-ரூ.15, உதகை கேரட்-ரூ.35, பீன்ஸ்-ரூ.40, வெள்ளரிக்காய்- ரூ.20, கோவைக்காய்-ரூ.15, பாகற்காய்-ரூ.20, முருங்கைக்காய்-ரூ.20, சவ்சவ்-ரூ.10, நூல்கோல்-ரூ.15, கொத்தவரங்காய்-ரூ.15, சிறிய கொத்தவரங்காய்-ரூ.35, முள்ளங்கி-ரூ.10, பீட்ரூட்-ரூ.15, புடலங்காய்-ரூ.7, முட்டைக் கோஸ்-ரூ.15, பீா்க்கங்காய்-ரூ.15, உஜாலா கத்தரிக்காய்- ரூ.15, வரி கத்தரிக்காய்- ரூ.12, அவரைக்காய்- ரூ.35, குடை மிளகாய் -ரூ.20, பச்சை மிளகாய்-ரூ.40, நாசிக் வெங்காயம்-ரூ.32, ஆந்திர வெங்காயம்-ரூ.22, உருளைக்கிழங்கு-ரூ.30. சின்ன வெங்காயம்-ரூ.70, இஞ்சி-ரூ.220, பூண்டு ரூ.160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகள் விலை சரிவால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்டகாய்கறிகளின் விலை சரிவடைந்துள்ளது.

time-read
1 min  |
September 04, 2023