CATEGORIES
Kategorier
கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்க வலியுறுத்தல்
மேட்டூர் அணை நீர்மட்டம், 96.80 அடியாக சரிந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து, நடப்பு (ஆகஸ்ட் மாதத்துக்கான, 45 டி.எம்.சி., தண்ணீரை கேட்டு பெற வேண்டும் என, டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரும்பு வெட்டும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்
3,000 ஏக்கர் பரப்பளவில் ஆலைக்கரும்பு சாகுபடி தேவாரம் பகுதியில் நடக்கிறது.
கேழ்வரகில் எதிர்பார்த்த மகசூல் இல்லை
திருப்புவனம் வட்டாரத்தில் நெல் விவசாயம் கைவிட்ட நிலையில் கேழ்வரகிலும் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.
இந்தியாவின் கிழக்கு, வடமேற்கு பகுதிகளில் கனமழை பெய்யும்
இந்தியாவின் கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் நாளை வரை கனமழை பெய்யும். இதனால் ஒடிசா மற்றும் சத்தீஸ் கருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பண்ணை பசுமை காய்கறி கடையில் ரூ.36 கோடிக்கு விற்பனை
அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்
பருவமழையில்லாததால் நெல் விதைப்பில் விவசாயிகள் தயக்கம்
கடும் வறட்சியால் ஆடியில் விதைப்பு செய்ய வேண்டிய விவசாயிகள் ஆவணி துவங்கிய நிலையிலும் நெல் விதைப்பு பணி செய்ய தயங்கி வருகின்றனர்.
பீட்ரூட்க்கு விலையில்லாததால் விவசாயிகள் கவலை
கம்பம் பகுதியில் பீட்ரூட் விளைச்சல் அதிகரித்தும், விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து என்பதற்கு ஆதாரமில்லை
மத்திய நீர்வள ஆணையம்
வாழை, மரவள்ளி விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்யலாம்
பயிர் கடன் பெற்ற விவசாயிகள் வங்கிகளிலும் கடன் பெறாத விவசாயிகள் அரசின் பொது சேவை மையங்களிலும் ஆன்லைன் மூலம் பிரீமிய தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார்.
சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை
சிறுதானியங்களுக்கு தேவை அதிகரித்துள்ள நிலையில், சாகுபடி பரப்பை அதிகரிக்க, வேளாண்துறை மூலம் அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிபந்தனையற்ற பயிர்க்கடன் விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தல்
கரோனா காலத்தில் விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற முறையில் பயிர்க் கடன் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
பருத்தி, உளுந்து, நிலக்கடலை பயிர்களுக்கு காப்பீடு செப்டம்பர் 15க்குள் செய்யலாம்
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், எஸ்.புதூர், சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த விவசாயிகள் காரீப் பருவ பயிர்களான உளுந்து, பருத்தி, நிலக்கடலை பயிருக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளளலாம்.
ஓணத்திற்காக தினமும் கேரளா செல்லும் காய்கறிகள்
ஓணத்திற்காக கம்பத்திலிருந்து தினமும் 50 டன் காய்கறிகள் கேரளாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
தேயிலை ஏலத்தில் மொத்த வருமானம் உயர்வு
இன்கோசர்வ் தேயிலை ஏலத்தில், ரூ.3.97 கோடி மொத்த வருமானம் கிடைத்தது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நஷ்டத்தை தவிர்க்க பருத்தி சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்
கன்னிவாடி பகுதியில் மக்காச்சோள விவசாயிகள், பருத்தி சாகுபடிக்கு மாறி விதைப்பு பணியில் தீவிரம் காட்டுகின்றனர்.
பார்த்தீனியம் செடியை மட்க வைத்து உரமாக்கலாம்
பார்த்தீனியம் செடியை மட்க வைத்து உரமாக்கி பயன்படுத்த வேளாண் அறிவியல் மையம் ஆலோசனை வழங்கியுள்ளது.
பெரம்பலூரில் மழையால் விதைப்புப் பணி தீவிரம்
பெரம்பலூர் மாவட்டத்தில், பருவ மழை தீவிரத்தால் மக்காசோளம், பருத்தி ஆகியவற்றை விதைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மீன் பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு மானியம்
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் சார்பில், மீன் பண்ணைகள் அமைக்க 50 சதவீத மானிய திட்டத்தில் பயன்பெற விவசயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பாக தொழிற்துறை பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை
விரைவான வேளாண்மை வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் தொடர்பான முன்னெடுப்பு முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆலோசனை நடத்தினார்.
கண்டலேறு அணையில் அடுத்த மாதம் தண்ணீர் திறக்க திட்டம்
சென்னையின் குடிநீர் தேவைக்காக தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் செய்துள்ளன.
5.56 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் வெட்டுக் கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
வேளாண் அமைச்சகம் தகவல்
கால்நடைகளைத் தாக்கும் நோயைக் கட்டுப்படுத்தலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்
கால்நடைகளைத் தாக்கும் நோயைக் கட்டுப்படுத்த, கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தெரிவித்துள்ளார்.
கீழ்பவானி வாய்க்காலில் பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் வரத்தின்றி கடைக்கோடி விவசாயிகள் கவலை
மொடக்குறிச்சி தாலுகாவில், கீழ்பவானி வாய்க்காலில் முறையாக பராமரிப்புப் பணிகள் பணிகள் மேற்கொள்ளாததால் கடைக்கோடி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு இன்னமும் தண்ணீர் வந்து சேரவில்லை என தெரிவித்தனர்.
வெளிமாவட்ட நெல் மூட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தல்
கொள்ளிடம் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்படுவதை தடை செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சூரிய சக்தி பம்ப்செட் அமைக்க வேளாண் துறை அழைப்பு
சூரிய சக்தி பம்ப்செட்களை அதிகளவில் பயன்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும், என்று வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பீர்க்கங்காய்க்கு விலையில்லாததால் விவசாயிகள் கவலை
பீர்க்கங்காய்க்கு விலை இல்லாததால், பாலமலை விவசாயிகளை கவலையடைந்து உள்ளனர்.
கே.மோட்டூரில் திருந்திய நெல் சாகுபடி பயிற்சி
வேளாண்மை துறை சார்பில் பர்கூர் வட்டத்தில் உள்ள கே.மோட்டூர் கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடியின் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பூக்களுக்கு விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
கரோனாவால் பூக்களுக்கு விலை கிடைக்காமல் கடந்த 5 மாதங்களாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போதைய தளர்வுகளால் திருமணம் மற்றும் விசேசங்கள் நடைபெறுவதால் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மீன் வளர்ப்போருக்கு மானியம் அறிவிப்பு
திருவாரூரில், தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.